கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் விஞ்ஞாபனம் (முழுமையாக)

 கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் விஞ்ஞாபனம்
நமது கனவு
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் மிக முக்கியமானதொரு ஜனாதிபதித் தேர்தலை இந்த நாட்டு மக்கள் சந்திக்கவிருக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு மேலான உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு  வ ரப்பட்ட பின்னர் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெற்று முடிந்திருக்கின்றன. யுத்தத்திற்குப் பின்னர் நிலையான அபிவிருத்தியை நோக்கி பயணித்த நமது தேசம் 2015 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் திணிக்கப் பட்ட கலவரங்கள் மூலமாக பின்நோக்கிப் பயணிக்கும் ஒரு காலத்தறுவாயில் நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்கின்றோம். 


இன,மத முரண்பாடுகளால் அடையாளப்படுத்தப்படும் ஒரு தேசம் ஒரு போதும் முன் நோக்கிப் பயணிக்க முடியாது. இலங்கையின் பிரிபடாத இறையாண் மையைப் பாதுகாத்து நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்து, இனங்களின் பெயரால் மதங்களின் பெயரால் அடிப்படை வாதங்களையும், தீவிரவாதங்களையும் உள்நுழைவிக்கும் சக்திகளைத் துல்லியமாக இனங்கண்டு, நீண்ட காலப் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப் படுத்தும் வல்லமை பொருந்திய சக்தி மிக்க ஒரு தேசிய தலைமைத்துவத்தை உருவாக்குவதே எனது கனவு. 

இக்கனவினை நனவாக்க இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் விஷேட அ ம்சமான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இன்றியமையாதது. ஆனால் இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விடும் தொனியில் விடுக்கப்படும் ஜனாதிபதி முறைகளுக்கு எதிரான கோஷம் இப்போது வலுப்பெற்று வருவது ஆபத்தானது. மேலும் 19ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஜனாதிபதி, பிரதமர் முறுகலை நிரந்தர சாபமாக மாற்றி அந்நிய சக்திகளின் தலையீடுகளுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் நமது நாட்டின் தேசிய பாதுகாப்பும் இறையாண்மையும் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. 


2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இருந்து இலங்கை சிறுபான்மை மக்களை பெரும்பான்மை சமூகத்திடமிருந்து நிரந்தரமாக பிரிக்க முனையும் வகையில் கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும் அமைந்து விட்டன, இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களையும் எனது நீண்டகால அரசியல் அனுபவங்களையும், நமது சமூகம் சந்தித்த தொடர் இன்னல்களையும் கருத்திற கொண்டு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் குதிப்பதற்கான தீர்க்கமானதொரு முடிவினை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

பிரதான தேசிய கட்சிகளுக்கு நமது சமூகம் வாக்குகளை அள்ளி வழங்கினாலும், ஜனநாயக ரீதியிலும், எண்கணித முறையிலும் அதனை நிறுவ முடியாமல் தடுமாறி நமது இருப்பைத் தொலைத்த வரலாறு நமக்கு புதிதானதல்ல. நமது சமூகத்தின் ஒட்டு மொத்த வாக்குப்பலத்தினை ஒன்று திரட்டி ஒரு சிறந்த தேசிய த லைமைத்துவத்தை உருவாக்கி நாட்டை கட்டியெழுப்புவது எப்படி என்றும் யோசித்தேன். அதன் பலனாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடும் தீர்மானத்திற்கு வந்தேன். 

இ து நமது தேசம், நமது உயிருக்கு நிகராக இந்த நாட்டை நேசிக்கின்றோம், காலணித்துவ ஆ ட்சியாளர்க ளிடமிருந்து நமது இறைமையை காக்க நமது 



முன்னோர்கள் இரத்தம் சிந்தியிருக்கின்றார்கள். நிபந்தனையற்ற சுதந்திரத்தை கோரிய சமூகம் நாம் என்பது நமக்கான கீர்த்தியாக வரலாற்றின் நெடுகிலும் தொடர்ந்து வந்திருக்கின்றது. அந்த மரபுக்கு அமைய நாட்டின் அனைத்து தேசிய விவகாரங்களிலும் நாம் காத்திரமான பங்களிப்பினை நல்கி வந்திருக்கின்றோம். இன்னும் தொடரவும் இருக்கின்றோம். 

வரலாறு நம்மை வாழ்த்தியது, இடையூறுகள் எம்மை சிதைத்தன, கோர யுத்தம் நமது உயிர்களையும், உடைமைகளையும், மற்றும் நமது மண்ணையும் காவு கொண்டன. அதிகார வெறியைக் குறியாக n காண்டிராத நம் சமூகத்தை ஒட்டு மொத்தமாக தீவிரவாத முத்திரை யைக் குத்த முனைவது என்பது நமது நாட்டின் இயல்பான சமூக அரசியல் கலாச்சாரமல்ல. இவை அனைத்தும் நம்மீதும் நமது தேசத்தின் மீதும் திணிக்கப்பட்டவை என்பதை நிரூபித்து நாட்டின் ஒருமைப்பாட்டினை நிறுவும் தேர்தலாகவே நான் இதனைப் பார்க்கின்றேன். 

தேசிய ஒருமைப்பாடும், பாதுகாப்பும். 



தொடர்ச்சியாக உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளினால் அழுத்தங்களுக்கும், சிக்கலகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் நம் நாட்டு சமூகங்களுக்கு தேசிய அளவில் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒரு தேசிய செயல்திட்டத்தை நிறுவுதல். 


சிறுபான்மை மக்களுக்கெதிரான கலவரங்களைத் தடை செய்யும் வகையில் கடுமையான ச ட்டத்தைப் பாராளுமன்றத்தினூடாக நிறுவுதல். (PREVENTION OF RIOTS ACT).
பொது மக்கள் மத்தியில் வெறுப்பூட்டும் பேச்சைத் தடைசெய்யும் வகையிலான சட்டத்தை பாராளுமன்றத்தினூடாக உருவாக்குதல் (PREVENTION OF HATE SPEECH ACT). 



தேசிய ஒருமைப்பாட்டுக்கான ஆணைக்குழுவொன்றை பரிந்துரைத்து (COMMISSION FOR NATIONAL INTEGRITY) இன, மத, மொழி ரீதியான முரண்பாடுகளை உருவாக்கும் சக்திகள், காரணிகள், மற்றும் செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றைத் தடுப்பதற்கான தேசிய பாதுகாப்பு முறைமையை உ ருவாக்குவதுடன், பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கான நிவாரணங்களையும் தீர்வினையும் உடனடியாக வழங்குதல். 



அனைத்து சமூகத்தினைச் சேர்ந்த மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தரைப்படை, கடற்படை, விமானப்படை, மற்றும் சிவில் பொலிஸ் உயர் பாதுகாப்பு ந pர்வாகக் கட்டமைப்பினை உருவாக்குவதைப் பரிந்துரைத்து அவற்றை உயிரோட்டம் மிக்கதாக செயற்படுத்தல. 



சகல சமூகங்களையும் உள்ளடக்கி பிரதேச ரீதியாக சிவில் பொலிஸ் அமைப்பு நிறுவப்படும். அவசர தேவைகளின் போது தேசிய பாதுகாப்பு மற்றும் இனநல்லுறவை வளர்க்கும் வகையில் அவர்களின் செயற்பாடு அமையும். மலேசியா, இந்தியா போன்ற ப ல் சமூகங்கள் வாழும் நாடுகளில் இம்முறை மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது எ ன்பது குறிப்பிடத்தக்கதாகும். நிலையான அபிவிருத்திக்கான பொருளாதாரக் கட்டமைப்பு

இலங்கை ஒரு ஆசிய நாடு என்ற வகையில் நமது தேசம் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளை இனங்கண்டு நிலையான அபிவிருத்திக்கான சவால்கள் முதல் கட்டமாக அடையாளம் காணப்படல் வேண்டும். அ த்துடன் சர்வதேச நாடு களின் உதவிகளோடு நிலையான அபிவிருத்திக்கான திட்டங்களை அறிமுகம் செய்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல். 
விவசாயம்
விவசாய நாடாக விளங்கும் இலங்கையில விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளை முறையான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வளமிக்க துறைகளாக மாற்றுதல். 
பொருளாதாரத்தை வளப்படுத்தும் தொழிற் பேட்டை களையும் விஷேட பொருளாதார வ லயங்களையும் நிறுவி நிலையான நீண்ட காலத் திட்டங்களை வடிவமைத்தல். 
விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிலையங்களை உருவாக்குவதுடன் தேர்தலின் பின்னர் முதலாவது விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தை அம்பாறை மாவட்டத்தில் நிறுவி ஆராய்ச்சி நிலையங்களினுடாக விவசாயிகளுக்கு நவீன விவசாய தொழிற் பயிறசிகளை வழங்குவதுடன். விவசாயிகளுக்கான வட்டியில்லா கடன்களையும் விஷேட காப்புறுதித் திட்டங்களையும் அறிமுகம் செய்தல். 


தென்னை பயிர்ச்செய்கையை சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்கள் மற்றும் வ ளவாளர்களூடாக வளப்படுத்தி, உள்நாட்டு தேவையினைப் பூர்த்தி செய்து கொள்வதுடன் தென்னை உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை வெளிநாடுகளுக்கு மேற்கொள்வதின் மூலம் அதிகூடிய தனி மனித வருமானத்தினை ஈட்டக்கூடிய ஒரு கௌரவமான விவசாய சமூகத்தினைக் கட்டியெழுப்புவதுடன், இத்திட்டத்திற்குப் பொருத்தமான பிரதேசங்கள் இனம் காணப்பட்டு மேற்குறிப்பிட்ட தென்னை பயிர்ச்செய்கை ஆராய்ச்சி அபிவிருத்தி மையங்களை உருவாக்குதல். 

கடல் வளம் 



உவர்நீர், நன்னீர் மற்றும் ஆழ்கடல் மீன்பிடித்துறைகளை வளர்ச்சியடையச் செய்வதற்காகவும் (ECONOMIC COMMITTEE FOR THE ENHANCEMENT OF AQUATIC RESOURCES) நீர் வளங்களை  மேம்படுத்துவதற்காகவும் விஷேட பொருளாதார செயற்குழுவை அமைத்தல். 

மீன்பிடித் துறையை முன்னேற்றும் முகமாக ஒலுவில், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகங்களை வலுவூட்டி, நவீன மயப்படுத்தி சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்கள், நன்கொடை வழங்குபவர்களை அறிமுகம் செய்து மீன்பிடித்துறைகளை நவீன வகையில் மேம்படுத்துவதுடன், சர்வதேச முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் குறித்த பிரதேச இளைஞர்களுக்கு கடல்சார் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துதல். 


தேசிய, சர்வதேச முதலீட்டாளர்களையும், மீனவர் சங்கங்களையும் ஒன்றிணைக்கும் மு கமாக கடல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி வலயங்களை (DEVELOPMENT ZONES FOR SEA RESOURCES & RESEARCH) முதற்கட்டமாக திருகோணமலை மற்றும் மன்னாரில ஸ்தாபித்தல். 

சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் திருகோணமலை துறைமுகம் நவீன ம யப்படுத்தப்பட்டு, கப்பல் கட்டும் தொழில் உட்பட பாரிய தொழிற்சாலைகளை உ ருவாக்கி, பல்லாயிரக்கணக்கானத் தொழில் வாய்புகளை வழங்கி இன நல்லுறவை வலுப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல். 

முஸ்லிம் சமூக விவகாரங்களும், பைத்துல்மால் நிதியமும் 


இலங்கை முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும், நெருக்குதல்களுக்கும் முகம் கொடுத்தது. முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் மூலமும், முஸ்லிம் சமுதாயம் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் நம் சமூகம் நமது அடிப்படை அடையாளத்தை இழந்து நிற்கின்றது. நம் அடையாளத்தை உறுதிப்படுத்தி நம் தேசபக்தியை நிரூபிக்க வேண்டிய தார்மீக கடமை நமக்கிருக்கின்றது. 



எனவே நாட்டின் தேசிய, சமய, கலாசார, பொருளாதார, பாதுகாப்பு கட்டமைப்புக்குட்பட்டு அ ரசாங்கத்திற்கும், அமைச்சரவைக்கும் பொறுப்புக் கூறும் வகையில் சட்ட ரீதியாகவே முஸ்லிம் சமய அலுவல்கள் விவகார அமைச்சினையும், திணைக்களத்தினையும் மீளக்கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் தேவையாகும். 

தற்போது பயன்பாட்டிலிருந்து அழிந்து போகும் நிலையிலிருக்கும் முஸ்லிம்களின் உ ள்நாட்டு கலை, கலாசார செயற்பாடுகளை மீளக் கட்டியெழுப்புவதுடன் நம் இளம் சந்ததியினருக்கும் இக்கலை கலாச்சாரங்களை கொண்டு சேர்க்கும் வகையில் அவற்றை மீள அறிமுகப்படுததுவதின் மூலம் பழைமையான வரலாறுகளை ஞாபகப்படுத்தல். நமது மூத்த கலைஞர்களை அடையாளம் கண்டு கௌரவித்து ஊக்குவிப்பு தொகைகளை வழங்கி வருடாந்த கலை கலாசார விழாக்களை ஏற்பாடு செய்தல். 
அதியுயர் சபை (SUPREME COUNCIL) 


நமது சமூகம் எதிர்கொள்ளும் சமகால சவால்களை முறியடிக்க உடனடித் தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையிலும், நீண்டகால செயற்பாடுகளுக்கான செயற்றிட்டங்களை உருவாக்கவும், உலமாககள், மார்க்க அறிஞர்கள், பாராளுமன்றத்தில், ந மது சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிப் பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள், பு த்தி ஜீவிகள் மார்க்க அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள் அடங்கிய ஒரு அ தியுயர் சபை (Supreme Council) ஐ சட்ட ரீதியாக நிறுவி முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி நாட்டை நேசிக்கும் முஸ்லிம் சமூகத்தை கட்டியெழுப்புதல். 



பைத்துல்மால் நிதியம் 



நமது சமூகம் பொதுவாக அடிக்கடி சமூக, சமய, பொருளாதார, சுகாதார, காணி , கலாசார, கல்வி சார்ப் பிரச்சினைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள், செயற்கையான கலவரங்கள் போன்ற அனர்த்தங்களை எதிர்கொள்வதால் அவற்றுக்குத் தீர்வு காணும் பொருட்டு 'பைத்துல்மால் நிதியம்'' ஒன்றினை முஸ்லிம் சமய விவகார அ லுவல்கள் அமைச்சில் உருவாக்கப்படல் வேண்டும். இத்தகைய முறைமை உலகில் பல்வேறு நாடுகளில சிறுபான்மையினரின் நலன்களுக்காக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இம்முறையை அமுல்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளின் உதவிகளூடாகவும், முதலீடுகளின் மூலமாகவும் பைத்துல்மால் நிதியம் வளப்படுத்தப்படும். 

உயர் கல்விக்கான நிதியுதவி


இந்நிதியத்தினூடாக உயர் கல்வியைத் தொடர்வதில் பொருளாதார பிரச்சினைகளை எதிர் கொள்ளும் நமது சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விஷேட புலமைப்பரிசில் திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தல். 



சுகாதார வசதி வாய்ப்புக்கள் 



புற்றுநோய், சிறுநீரக நோய்கள், மற்றும் இருதய நோய்கள், போன்ற பாரிய நோய்களை குணப்படுத்துவதில் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் வறுமைக் கோட்டின் கீழ் வாடும் நமது மக்களை இனங்கண்டு பைத்துல்மால் நிதியத்தின் மூலமாக அவர்களின் சிகிச்சைக்குத் தேவையான நிதியை வழங்குதல். இவர்களுக்கான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன விசேட ச த்திர சிகிச்சை நிபுணர்களின் மூலம் நிறைவேற்றல். பெண் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் (V.O.G.) மற்றும் அத்துறை சார்ந்த பெண் சுகாதார உ த்தியோகத்தர்களை நமது சமூகத்தில் அதிகரிக்கச் செய்வதற்காக இத்துறைகளில் மேற் படிப்பினை மேற்கொள்ள விரும்பும் பெண் வைத்தியர்களை தெரிவு செய்து அவர்களது கல்விக்கான செலவுகளை பைத்துல்மால் நிதியத்தின் மூலமாக வழங்குதல். மேலும் அத்தகைய பெண் வைத்திய நிபுணர்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகளில் மேற்படிப்பைத் தொடர நிதி உதவிகளை வழங்குதல். 



புனித உம்ரா பயண வசதிகள் 



இ துவரை புனித உம்ரா பயணத்தை பொருளாதாரப் பிரச்சினை காரணமாக நிறைவேற்ற முடியாத இமாம்கள், முஅத்தின்கள், மார்க்க அறிஞர்கள், சன்மார்க்க அறிஞர்கள், சமுக பணியிலீடுபட்டு ஒய்வு பெற்றவர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள், புத்திஜீவிகள், போன்றவர்களை முறையாக இனங்கண்டு புனித உம்ரா யாத்திரை மேற்கொள்வதற்கான வழிவகைகளை பைத்துல்மால் நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளல். 


பள்ளிவாசல்கள், இமாம்கள், முஅத்தின்களுக்கான விசேட திட்டங்கள். 



பள்ளிவாசல்களில் கடமை புரியும் உலமாக்கள், முஅத்தின்கள், மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்ட சம்பள நிர்ணயத்தையும், காப்புறுதியையும், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றை (EPF, ETF) நடைமுறைப்படுத்த இந்நிதியத்தினைப் பயன்படுத்தல். மேலும் பள்ளிவாசல்களை வருமானம் ஈட்டும் அடிப்படையில் தரப்படுத்தி அதற்கேற்ப ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பதோடு வ ருமானம் குறைந்த பள்ளிவாசல்களுக்கு தேவையான உதவிகளை இந்நிதியத்தினூடாக வழங்குதல். 



வக்பு சொத்துக்களுக்கான விசேட ஆணைக்குழு



நமது சமூகத்தின் தீராத பிரச்சினைகளாக உருவெடுத்துள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ச மய நிறுவனங்களின் வக்பு சொத்துக்களை நேர்மையாக பராமரிக்கும் n சயற்திட்டத்தினை பைத்துல்மால் நிதியத்தினூடாக சீர்படுத்துவதுடன், அபகரிக்கப்பட்ட வ க்பு சொத்துக்களை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வுகாண வக்பு சொத்துக்களுக்கான விஷேட ஆணைக்குழுவினை (SPECIALCOMMISSION FOR WAKF PROPERTIES) உருவாக்கி அச்சொத்துக்களை மீட்டு பராமரிப்பதற்கான தீர்வினை இந்நிதியத்தினூடாக வழங்குதல். 

சிறுவியாபாரிகள், வணிகர்கள் 



நம் சமூகத்திலிருக்கும் சிறு வியாபாரிகள், வணிகர்கள், மொத்த வியாபாரிகள், உ ற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்களின் நலன் கருதி முழுமையான சன்மார்க்க அடிப்படையிலான பொருளாதார முறைமை ஒன்றை இந்நிதியத்தினூடாகவும் Supreme Council இன் வழிகாட்டலுக்கு அமைவாகவும் உருவாக்குதல் இவற்றை நடைமுறைப்படுத்த பிராந்திய, தேசிய பொருளாதார மையங்களை உருவாக்குதல். 

கல்வி


எமது சமூக மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழிநுட்ப துறைகளில் சித்தியடையும் விகிதம் மிகவும் குறைவான நிலையில் உள்ளது. இவர்களின் வாழ்வினை மேம்படுத்தவும் கணித விஞ்ஞான துறைகளில் நம்மவர்கள் சாதாரணமாக சாதனை படைக்கவும் அம்மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டங்கள் பல அறிமுகப்படுத்தப்படும். அதற்காக பாடசாலைகளை தரமுயர்த்துதல், நிதி உதவி வழங்கல் ஆகிய செயற்பாடுகளும் இத்துறையில்  மேம்படுத்தப்படும். 



இன விகிதாசாரத்துக்கு அமைவாக பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு மாணவர்களையும் பெற்றோர்களையும்  ஊக்கப்படுத்தி நெறிப்படுத்தல். 



முஸ்லிம் சமுதாய மாணவர்கள் பல்கலைக்கழக பிரவேசத்தில் கலை, வர்த்தகம் சார் துறைகளையே அதிகமாக தெரிவாகின்றனர். இதுவல்லாத கணிதம், விஞ்ஞானத் துறை மேம்பாட்டுக்காக நமது கல்வி வலயங்கள் தோறும் விசேட செயல்முறைகளை அறிமுகம் செய்தல். 



ஆசிரியர்கள், ஆளணி பற்றாக்குறையுள்ள பாடசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் 



நவீன கற்பித்தல் உத்திகள் ஊடாக மிகச்சிறந்த மாணவ சமூகத்தினை ஏற்படுத்த ஆ சிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விசேட பயிற்சி நெறிகளை வழங்கல். 

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சனத்தொகை 10% வீதமாக இருக்கும அதே வேளை பல்கலைக்கழக பிரவேசம் 4% வரையே காணப்படுவது கவலைதரும் விடயமாகும். எனவே வெளிவாரிப் பட்டப்படிப்பு மற்றும் தனியார் துறைகளூடாக பட்டதாரிகளை உருவாக்கும் செயற்திட்டங்ளை அறிமுகப்படுத்தல். 
பிரதான பாடசாலைகளில் முஸ்லிம்கள் தமது பிள்ளைகளை சேர்ப்பதில் ஏற்படும் சிக்கல் காரணமாகவும் சர்வதேச பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் பொருளாதார வசதி காரணமாக இடைநடுவே தமது படிப்பினை கைவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் பெரும் பிரச்சினையாக உரு வெடுத்துள்ள பாடசாலை பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் சகல வசதிகளும் கொண்ட நவீன தொழிநுட்ப உத்திகளோடு கூடிய ஆண், பெண் முஸ்லிம் உயர்தர பாடசாலைகள் அமைக்கப்படும். 
மலையகம் மற்றும் பிரதான நகரங்களில் செறிந்து வாழும் எமது மாணவர்களின் நலன்களை கருத்திற் கொண்டு தகுதியான கல்வி வலயங்கள் அமைக்கப்படும். 
விசேட தேவைகள் உடைய மாணவர்களுக்கான பாடசாலைகள் 



நமது சமூகத்தில் உள்ள விசேட தேவையுடைய மாணவர்கள், சமூகத்தில் சிறந்த அங்கீகாரத்துடன் தமது வாழ்வை அமைத்துக் கொள்ளும் விதமாக விசேட தேவையுடையோருக்கான விசேட பாடசாலை அமைக்கப்படும். இப்பாடசாலை சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன், நவீன தொழில் நுட்ப வசதியுடன் நிறுவப்படும். அரபுக் கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டம். 



சமூகத்திலுள்ள சகல மார்க்க குழுவினர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி, அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இலங்கையில் காணப்படும் சகல அரபுக் கல்லூரிகளுக்குமான பொதுவான பாடத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும். அத்துடன் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் NVQ தராதர சான்றிதழை பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களால் பரிந்துரை செய்யப்படும் பாடநெறிகளும் உ ள்வாங்கப்பட்டு சகல உலமாக்களும் மார்க்க அறிவுடன் கூடிய கல்வித் தகைமையுடன் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள வழிவகைகளை மேற்கொள்ளல். 



வீட்டுக்கு ஒரு பட்டதாரி



க.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ப ட்டதாரியாக உருவாக்கு வதை உறுதி செய்யும் விதமாக க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களை அத்துறைகளில் இனங்கண்டு அவர்களுக்கான கல்வி வழிகாட்டல்களையும் நிதி உதவிகளையும் வழங்கி அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஊடாக பட்டதாரிகளை உருவாக்குதல். 

க.பொ.த.உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவில் ஆகக்குறைந்த 3 திறமைச் சித்திகளை நமது மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்கான விஷேட வாய்ப்பு வசதிகளை இந்நிதியத்தினூடாக ஏற்பாடு செய்து கொடுத்தல். 


நமது உரிமைகள், புராதன, பாரம்பரிய கலை, கலாசார, பண்பாடுகள் 



இலங்கையின் வரலாறு நெடுகிலும் எமது சமூகம் இந்நாட்டுக்கு ஆற்றிய பணிகள் அ ளப்பரியது. காலணித்துவ, ஏகாதிபத்தியவாதிகள் நாட்டை சூறையாடும் போது நாங்கள் நாட்டுக்காக உழைத்த சம்பவங்களை நினைவுபடுத்துகின்றேன். 

ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை எமது மதச்சுதந்திரம், மதக் கோட்பாடுகள், பாரம்பரிய பண்பாட்டு, கலாசார விடயங்கள், மற்றும் எம்மக்கள் அனுபவித்து வந்த அனைத்து விடயங்களும் இன்று கேள்விக்குட்படுத்தப்பட்ட நிலையில் அடக்கியொடுக்கப்பட்ட நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை மாற்றப்பட வேண்டும். இத்தேர்தல் முடிந்த கையோடு நாம் அனுபவித்து வந்த சகல உரிமைகளையும் குறிப்பாக எமது மார்க்க சட்டங்கள், சம்பிரதாயங்கள், ஆடை அணிகலன்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஆரம்ப காலங்களில் நாம் எப்படி பின்பற்றினோமோ அதே போன்ற யுகத்தினை நான் ஏற்படுத்துவேன். இச்சூழலில் சகல இன மக்களும் ஒற்றுமையாகவும், சமாதனமாகவும், நட்புடனும் வாழ்கின்ற ஒரு புதிய யுகத்தைக் கட்டி எழுப்புவேன். 



நாட்டை நேசித்த நமது சமூகத்தின் முன்னோர்களையும் அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய உ ன்னதமான பணிகளையும் ஆய்வு செய்து நூதனசாலைகளையும் நூலகங்களையும் நிறுவுவதன் மூலம் நமது புராதன, பாரம்பரிய கலை, கலாசார விழுமியங்களை வ ரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தல். மற்றும் இதனை சாத்தியமாக்க இலங்கை ப ல்கலைக்கழகங்களில் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினை நிறுவுதல். காணிப் பிரச்சினை



நீண்ட காலமாக பூதாகர பிரச்சினையாக உருவெடுத்துள்ள காணிப்பிரச்சினைகளால் எமது சமூகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக நமது சமூகம் அனுபவித்து வந்த விவசாய, குடியிருப்புக் காணி, நிலங்கள், அம்பாறை மாவட்டத்தில் 14,327 ஏக்கர் காணியும், வன்னி மாவட்டத்தில் யுத்தம் காரணமாக முஸ்லிம்கள் இடம் பெயர்ந்த பின்னர் அ வர்கள் வாழ்ந்து வந்த சுமார் 12 கிராம சேவகர் பிரிவுகள் 3000ம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய கு டியிருப்பு காணிகளை பரம்பரை பரம்பரையாக நமது மக்கள் தொழுது வந்த ப ள்ளிவாசல்கள் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்திய 90க்கு மேற்பட்ட குளங்கள், காணிகள், வர்த்தமானி மூ லம் பிரகடனம் செய்து வன பரிபாலனத் திணைக்களம் வனவிலங்குத் திணைக்களம், தொல்பொருள் ஆ ய்வு த்திணைக்களம், ஆகிய நிறுவனங்களால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இக்காணிகளை மீட்பதற்காக மக்கள் நில மீட்புப் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.      யு த்த சூழ்நிலைகளால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட காணிகளும் இதில் அடங்கும். 

இதன் மூலம் அம்மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்திற்கான செயற்பாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இம்மக்களின் நீண்ட காலப் பிரச்சினையை உடனடியாக தீர்க்கும் வகையில் திருத்தச்சட்ட ரீதியான ஆவணங்களை சம்ர்ப்பித்து மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் விசேட காணி மீடபு ஆணைக்குழுவினை (Special Commission for Redemption of Land) நிறுவி ச மூகத்தின் காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேர்தலின் பின்னர் அமுல்ப்படுத்துவது என நான் இத்தால் உறுதிமொழி அளிக்கின்றேன். 



நான் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்தபோது நமது மக்கள் தமது பூர்வீகக் காணிகளை இழந்து வெறும் ஆவணங்களை வைத்துக்கொண்டு பத்து வருடங்களுக்கு மேலாக நீதி மன்றங்களிலும், அரச காரியாலயங்களிலும், ஆவணங்களுடன் அலைந்து திரிந்ததை நான் கண்டு கொண்டேன். எனது ஆளுநர் அதிகாரங்களை கொண்டு இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கடுமையான முயற்சிகளை எடுத்த போது எனது ஆளுநர் பதவி ப றிக்கப்பட்டது. இருப்பினும் இத் தேர்தலின் பின்னர் அவற்றை மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். 

அதே போன்று நாடு முழுவதும் நாம் 10% வாழ்ந்து வந்த போதிலும், மிக குறைவான விகிதத்திலேயே காணிகளைப் பெற்றுள்ளோம். எனவே முஸ்லிம்களின் விகிதாசரத்திற்கு ஏற்ப காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
நிர்வாக அலகு


சாய்ந்தமருது நகர சபை கோரிக்கை, கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை, கோரளைப்பற்று மத்தி பிரதேச சபை கோரிக்கை, தோப்பூர் பிரதேச செயலக கோரிக்கை, புத்தளம் அறுவக்காடு குப்பை கொட்டும் பிரச்சினை, கற்பிட்டி, அக்கரைப்பற்று (புத்தளம் மாவட்டம்) பிரதேச சபை கோரிக்கை மற்றும் குச்சவெளி, புல்மோட்டை காணிப் பிரச்சினைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும்.

கோரளைப்பற்று மேற்கு (ஒட்டமாவடி) பிரதேச சபை எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டு நகர சபையாக தரமுயர்த்தல்.
வாழைச்சேனையில் இயங்காமல் மூடப்பட்டிருக்கும் கடதாசி தொழிற்ச்சாலையை நவீன மயப்படுத்தி திறந்து வைப்பதன் மூலம் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தல்.


கிழக்கு மாகாணத்தில் தூர்ந்து போயுள்ள விவசாய நீர்ப்பாசன குளங்கள் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் புனர் நிர்மாணம் செய்யப்படும்.



மிக நீண்ட நாட்களாக மக்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் உடனடியாக மக்களுக்கு வழங்கி வைக்கப்படும்.

பின் தங்கிய பிரதேசங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் முகமாக ஆரம்ப சுகாதார (PRIMARY HEALTH CENTER) நிலையங்கள் உருவாக்கப்படும்.


கலவரங்கள், வன்முறைகளால் வாழ்வைத் தொலைத்து விரக்தியுற்றிருக்கும் சகலருக்கும் புனர்வாழ்வு 



சகல இன மக்களுடனும் நட்புறவோடும் ஐக்கியமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த எமது சமூகம் 21.04.2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் மிக மோசமாக தாக்கப்பட்டும் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் பல பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டும் எமது உடன் பிறப்புக்கள் கொலை செய்யப்பட்டும் இன்னும் பல கொடூரங்கள் இழைக்கப்பட்ட நிலையில் அப்பாவி இளைஞர்கள், கல்விமான்கள், வைத்தியர்கள், பெண்கள் அநியாயமான முறையில் கைது செய்யப்பட்டும் வதை முகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டும் காணப்படுகின்றனர்.



இ த்தாக்குதலின் பின்னர் சகல முஸ்லிம்களும் அச்சத்துடனும் எதிர்காலம் பற்றிய வினாக்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக இத் தேர்தல் முடிந்தவுடன் உ டனடியாக பாதிக்கப்பட்ட அனைத்துச் சொத்துக்களுக்கும் பூரண நஷ்டஈட்டை பெற்றுத் தருவேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். 



உடைக்கப்பட்ட பள்ளிவாசல்கள் மீண்டும் மிகச் சிறந்த முறையில் கட்டித்தரப்படும். 



ஆயிரத்திற்கும் அதிகமாக அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அனைவரின் விடுதலையையும் உறுதி செய்வேன். பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் திட்டங்களை உடனே அமுலுக்கு கொண்டுவருவேன். 

அச்ச நிலையைப் போக்கி தைரியமாக மானத்தோடும், மரியாதையோடும் கௌரவமாக வாழக்கூடிய நிலையை மீண்டும் உருவாக்க ப்பாடுபடுவேன். 


உளவியல் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கும் சகலருக்கும் அவர்களின் அச்சம் நீக்கி சக வாழ்விற்கு அடித்தளம் இடுவேன். எமது சமூகத்திற்கு எதிராக தீட்டப்பட்டிருக்கும் சதிகார சக்திகளின் சதிவலைகளின் அ டிப்படையை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இந்நாட்டில் கலவரங்கள், இனவன்முறைகள் தலைதூக்காத வகையில் தேவையான வழிமுறைகளை ஏ ற்படுத்துவதுடன், இன நல்லுறவு, ஒற்றுமை ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தக்கூடிய வ ழிமுறைமைகள் பற்றிய தெளிவைத் தருவதற்காக சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் இணைத்து மாற்று மத சகோதரர்களின் குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்களை நிவர்த்தி n சய்யும் விசேட குழு ஒன்றை அமைப்பேன். 



கலவரத்தினால் பாதிப்புக்குள்ளான காலி, ஜின்தோட்டை, அம்பாறை, கண்டி திகன, அக்குரனை, மெனிக்கின்ன, கடுகஸ்தொட்ட, சிலாபம், நீர்கொழும்பு, மினுவாங்கொட, குருநாகல், ஹெட்டிபொல, கினியம, இஹலகினியம, அனுக்கன, மானியங்கல, இடந்தவல, கொட்டாரமுல்லை, பலகத்துறை, தும்மத்துரை போன்ற அனைத்து ஊர் மக்களுக்கும் அவர்களது கவலைகள் பிரச்சினைகள் மனவருத்தங்கள் பொருளாதார வாழ்வாதார இழப்புக்களுடன் நானும் அவர்களில் ஒ ருவனாக இணைந்து இத்துயரில் இருந்து அவர்கள் விரைவாக மீள்வதற்காக தேசிய, ச ர்வதேச நிதியுதவிகளுடன் மீளவும் முன்பிருந்த நிலைமைகளை விட சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கான நிலைமையை ஏற்படுத்துவேன். 



அதே போல் கலவரங்கள், வன்முறைகளால் வாழ்வைத் தொலைத்து விரக்தியுற்றிருக்கும் சகலருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படும். கடந்த காலங்களில் பேருவளை, அளுத்கம பிரதேசங்கள் பாதிக்கப்பட்ட போது நான் இராஜாங்க புனர்வாழ்வு அமைச்சராக இருந்தேன். இதன் போது விசேட அமைச்சரவைப் பத்திரம் மூலம் 300 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுத்தேன் என்பதை நினைவூட்டுகின்றேன்.



கொழும்பு மாநகர் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேச மக்களுக்கான அடிப்படை வசதிகள 



கொழும்பு மாநகரத்திலும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலும அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்ததி அவர்களுக்கான சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான மலசலகூட வசதிகள் உடனடியாக ஏற்படுத்திக கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 


விளையாட்டு துறை 



நவீன விளையாட்டு நுட்பங்களை நமது சமூகத்தை சார்ந்த இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி விளையாட்டுத்துறை மூலம் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதோடு, தேசிய, சர்வதேச ரீதியில் சாதனைகளை நிறுவ ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.



தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்காணிக்கும் விசேட குழு.



நமது கனவு எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்காணித்து நடைமுறைப்படுத்துவதற்காக MONITORING

MISSION ON MANIFESTO எனும் விசேட குழு நியமிக்கப்படும்.



நமது கனவை நனவாக்கி, நாம் வாழ விரும்பும் நாடு



மன நிறைவுடன் வாழும் மக்கள் நிறைந்ததொரு நாடு. 



இனவாதத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டதொரு நாடு. மதவாதத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டதொரு நாடு. அனைத்து இனங்களும் பிற இனத்தவர்களை மதிக்கும் ஒரு நாடு. அனைத்து மதத்தவர்களும் பிற மதத்தவர்களை மதிக்கும் ஒரு நாடு. இனவாதத்திலிருந்து மீண்டு தேசியத்தை நிலை நிறுத்தியதொரு நாடு. மதவாதத்திலிருந்து மீண்டு மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தியதொரு நாடு. அனைத்து குடிமக்களினதும் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு நாடு. இதுவே நாம் விரும்பும் இலங்கை நாடாகும். 

இந்நாட்டில் அனைத்து இனங்களும் அனைத்து மதத்தினரும் கண்ணியமிக்க இலங்கையர் என்ற வகையில் மனநிறைவுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும். அதற்காக நாம் அனைவரும் அயராது பாடுபடுவோம். 


நவம்பர் 16ம் திகதி விடியல் நமது சமூகத்தின் விடியலாக அமைய வேண்டுமென்ற பிரார்த்தனைகளுடன் உரிமையின் சின்னமாம் ஒட்டகச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.



நவம்பர் 17ம் திகதி முழு உலகமே எம்மை வாழ்த்தும். நாம் மீண்டும் எழுவோம். துயரங்களை களைவோம் அ டக்குமுறைகளை அன்பால் வெல்வோம். இதயங்கள் கோர்த்து இனிமையாய் வாழ்வோம். நமக்கான நமது எதிர்கால சந்ததியினருக்கு வளமான நாட்டில் சிறப்பாக வாழக்கூடிய வழிவகைகளை அமைப்போம். நான் எ னது இறுதி மூச்சுவரை உங்களுக்காகவே வாழ்வேன். உங்கள் சுகதுக்கங்களில் பங்குகொள்ளும் சகோதரனாக என்னை ஏற்று நமது கனவை நனவாக்கி புது உலகைப் படைப்போம்.



இன்ஷா அல்லாஹ்...














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -