அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு நன்றி தெரிவிக்கும் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்


ட்டாளைச்சேனை பொது நூலக்கத்தில் தமிழ் பேசும் மக்களின் தலை சிறந்த தமிழ் தினசரிகளில் ஒன்றான 'தினக்குரல்' பத்திரிகை மிகவும் நீண்ட காலமாக இப்பகுதிகளில் ஏற்பட்ட ஒரு சில கசப்பான சம்பவங்களால் குறிப்பிட்ட அப் பத்திரிகை வாசகர்களின் வாசிப்புக்காக இப்பகுதி பொது நூலகங்களில் வைக்கப்படாமல் இருந்ததை இப்பகுதி வாசகர்கள் பெரும் குறையாக குறைபட்டுக்கொண்டார்கள்.
மேற்படி விடயம் சம்மந்தமாக முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியும், இலக்கிய ஆர்வலருமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர்கள் உட்பட ஏனைய உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். மேற்படி சட்டத்தரணி கபூர் அவர்களின் இக் குறிப்பிட்ட வேண்டுகோளுக்கிணங்க அப்பத்திரிகை மீண்டும் அட்டாளைச்சேனை பிரதேச சபை அதிகார எல்லைக்குள்யிருக்கும் எல்லா வாசிக சலைகளிலும் பொதுமக்களின் வாசிப்பிற்காக அப்பத்திரிகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் சம்மந்தமாக உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்தமைக்காக சட்டத்தரணி கபூர் அவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், ஏனைய உறுப்பினர்கள் உட்பட உத்தியோகத்தர்களுக்கும் இப்பிரதேச வாசகர்கள் சார்பில் தனது ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.





































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -