சர்வதேச ஆசீரியர் தினத்தை நினைவுகூரும் முகமாக இன்று 08.10.2019 அக்/அல்-முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாடசாலை மாணவியரின் தலைமைத்துவப் பண்புகள் சிறப்பாக வளர்ச்சி அடைந்திருப்பதையும்,குழு ஒருமைப்பாடு,பரஸ்பர புரிந்துணர்வு கௌரவிக்கும் மனப்பாங்கு என்பன சிறப்பாக உள்ளதையும் காண முடிந்தது.
இந்நிகழ்வில் ஆசிரியர்களின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக இடம்பெற்றமை மாணவர்களை மகிழ்வித்ததுடன் ஒரு புது அனுபவத்தையும் வழங்கியது.
ஆசிரியர்கள் அனைவரும் நடைபவனியாக மலர்தூவி வரவேற்கப் பட்டதும்,அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதும் வரலாற்றில் அழியா நினைவுகள்.