இவ்வாறு உலகசிறுவர் தினவிழாவில் உரையாற்றிய கிழக்கு மாகாண கல்விகலாசார விளையாட்டுத்துறை தகவல்தொழினுட்ப முன்பள்ளி இளைஞர்விவகார புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜி.முத்துபண்டா குறிப்பிட்டார்.
உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை ஏற்பாடுசெய்த மாபெரும் சிறுவர்தினவிழா (1) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ஊர்வலத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெற்ற இப்பெருவிழாவில் பிரதம அதிதியாகக்கலந்து சிறப்பித்துரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முன்னதாக வலயக்கல்விப்பணிமனை முன்றலிலிருந்து மாணவர்களின் விழிப்புணர்ச்சி ஊர்வலம் பலவித சுலோகங்களடங்கிய பதாதைகளுடன் இடம்பெற்றது.
நிறைவில் அதிதிகள் மாலைசூட்டி வரவேற்கப்பட்டு அல்மர்ஜான் மகளிர் கல்லூரிமண்டபத்தில் விழா நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு செயலாளர் முத்துபண்டா மேலும் பேசுகையில்:
பணத்தைக்கொடுத்து அன்பைப்பெறமுடியுமா? பாசத்தைப்பெறமுடியுமா? நட்பைப்பெறமுடியுமா? இல்லை.
ஆனாலம் பணம் பணம் என்று அலைகிறோம். இதனால் பிள்ளைகளை அரவணைக்க அன்புசெலுத்த தவறுகின்றோம். அதனால் அவர்கள் நெறிபிறழ்ந்து அவர்கள் பாட்டில் செல்கிறார்கள்.
அன்று தேவேந்திரமுனை தொடக்கம் பருத்தித்துறை வரை ஒரு பெண் தனியாக சுதந்திரமாக போய்வரமுடிந்தது. ஆனாலின்று வீட்டில் ஒருபெண் தனியாக இருக்கமுடியாது. பஸ்ஸில் தனியாக செல்லமுடியாது ரயிலில் செல்லமுடியாது.
இதற்கெல்லாம் காரணம் குடும்பங்கள் உண்மையான பாசத்துடன் அரவணைப்புடன் வாழ்வதில்லை.
வீட்டுத்தலைவி அல்லது தலைவன் பணம்தேடி வெளிநாடுசென்றால் அக்குடும்பம் பாதுகாப்பிழக்கிறது. பிள்ளைகள் மணம்போனபோக்கில் வாழத்தலைப்படுகிறார்கள்.
அன்று பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களை படிக்கக்கொடுத்தார்கள். இன்று அனைவரது கைகளிலும் புத்தகம் இருக்கிறதோ இல்லையோ விலைகூடிய ஸ்மார்ட்போன்pருக்கும்.
பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? என்று கேட்டால் சிலவேளைகளில் பதிலளிகக்கமுடியாதநிலை தோன்றுகிறது. தொழிலுக்கான கல்விவழிகாட்டல் எமது கல்வித்திட்டத்தில் இல்லாமையும் ஒரு குறைபாடாகவே காணமுடிகிறது.
இன்று பாடசாலையைவிட பிள்ளைகள் ரியுசனில் பெரிதும் நம்பியுள்ளனர். இதற்கு காரணம்என்ன என்பதை ஆராயவேண்டும். பிள்ளைகள் வேண்டிநிற்பதை நாம் வழங்குகின்றோமில்லை என்பதே சுருக்கமான விடையாகும்.
வருடம் 365நாட்களும் பிள்ளைகளின் பாதுகாப்பில் கவனம்செலுத்தி அன்பையும் அரவணைப்பையும் செலுத்தினால் இயல்பாகவே அவர்கள் நல்லபிள்ளைகளாக வாழ்வார்கள். நல்லதலைவர்களாக வருவார்கள். அப்போது சமுகமும் நாடும் நட்புள்ளதாக மாறும்.என்றார்.;
வலயத்தில் ஏலவே கடமையாற்றிஓய்வுபெற்ற வலயக்கல்விப்பணிப்பாளர் ஜ.எம்.இஸ்ஸதீன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எ.எல்.எம்.அமீன் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.எல்.எ.மஜீட் உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.செல்லத்துரை ஆசிரியஆலோசகர் எ.ம்.மஹ்றூப் அதிபர் இ.தங்கராசா ஆகியோர் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு;சசின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் தேசிய மாகாணமட்டங்களில் சாதனை புரிந்த 36மாணவர்கள் நினைவுச்சின்னங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டிக்கௌரவிக்கப்பட்டனா.;நிகழ்சி நெறியாள்கை மற்றும் தொகுப்பினை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா மேற்கொண்டார்.உதவியாக இணைப்பாளர் நிசார் செயற்பட்டார்.
மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மும்மொழியிலும்இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றியுரையினைஉதவிக்கல்விப்பணிப்பாளர் எ.எல்.மஜீட் ஆற்றினார்.