கோட்டாவை வெற்றி பெறச் செய்ய அம்பாரையில் கூடிய சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் !!

நூறுல் ஹுதா உமர்-
திர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முன்னெடுப்புகள் பற்றி ஆராயும் கூட்டம் ஒன்று நேற்று அம்பாறை மோன்டி ஹோட்டலில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் பிரதேச அமைப்பாளர்களும் முன்னாள் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மற்றும் முன்னாள் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற ராஜாங்க அமைச்சர் சிறியாணி விஜயவிக்ரம ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களை வெற்றி பெறச் செய்வதற்கு எவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை உழைக்க வேண்டும் என்பது சம்பந்தமாகவும் எதிர் வருகின்ற காலங்களில் இடம்பெற இருக்கின்ற தேர்தல் பிரச்சார மேடைகளில் அதேபோன்று தேர்தல் பணிகள் தொடர்பில் எவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பங்கெடுத்து அவருடைய வெற்றியின் பங்காளியாக மாறுவது என்பது சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பெரமுன பொதுச்செயலாளர் சத்தார் ஹாஜி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம் எஸ் சுபைர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடைய தேசிய முஸ்லிம் விவகார இணைப்பாளர் சிராஸ் யூனுஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -