நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழகத்தின் 2 வீரர்கள் இலங்கை தேசிய கனிஷ்ட கபடி அணிக்கு தெரிவு

எம்.என்.எம்.அப்ராஸ்-
நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழகத்தின் 2 வீரர்கள் இலங்கை தேசிய கனிஷ்ட கபடி அணிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் நவம்பர் மாதம் ஈரான் நாட்டில் நடைபெற இருக்கின்ற கனிஷ்ட உலக கிண்ண கபடிப் போட்டிக்கான இறுதி ஆண்கள் தெரிவு கடந்த 2019.10.20 (ஞாயிறு) டொரிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது இதன் போது மதீனா விளையாட்டுக்கழத்தின் வீரர்களான
எஸ்.எம்.சபிகான் மற்றும் ஏ.எம்.ஹாலிஸ் ஆகியோர் தெரிவு போட்டியில் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிக்காட்டியதன் மூலம் கபடி தெரிவுக்குழுவினால் இவ் இருவரும் Best Raiders ஆக தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் திறமை மூலம்அம்பாறை மாவட்டத்திற்கும் எமது நிந்தவூர் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் மதீனா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரரும் இலங்கை தேசிய கபடி அணியின் வீரருமான எம்.டி.அஸ்லம் சஜா என்பவர்
இதற்கு முன்னர் தேசிய கபடி அணிக்கும் கனிஷ்ட கபடி அணிக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
இவ்வீரர்களை பக்க பலமாக இருந்து இந்நிலமைக்கு அவ்வீரர்களை கொண்டு செல்ல தனது முழு அர்ப்பணிப்புடன் பயிற்சிகளை வழங்கிய மதீனா கழகத்தின் செயலாளரும் ஆசிரியருமான எஸ்.எம்.இஸ்மத் அவர்களுக்கும் அவரோடு இணைந்து பயிற்சியை வழங்கிய எம்.டி.அஸ்லம் சஜா மற்றும் மேலதிக ஆலோசனை வழங்கிய ஏ.எல்.அனஸ் அஹமட் அவர்களுக்கும் தலைவர் ஏ.எம்.அன்சார் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -