அரச துறையினரின் சம்பளப் பிரச்சினை - துணை அமைச்சரவைக் குழு இன்று கூடுகிறது


ரச துறையினரின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்காக நியமிக்கப்பட்ட துணை அமைச்சரவைக் குழு இன்று கூடுகிறது.
அரச துறை சம்பளப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த அமைச்சரவை உப குழு கடந்த வார இறுதியில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக்கூட்டத்தின் போது நியமிக்கப்பட்டது.
இன்றைய தினம் இந்த குழுக்கூட்டத்தின் போது, பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுடன், தனித்தனியாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமென்று குழுவின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான அசோக்க அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான மங்கள சமரவீர, வஜிர அபேவர்த்தன, டொக்டர் ராஜித சேனாரத்ன உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -