அக்கரைப்பற்று பிரதேசத்தில் வீடொன்றின் மீது இனந்தெரியாதவர்களினால் தாக்குதல்



நூருல் ஹுதா உமர்-
ம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் வீடொன்றின் மீது இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று, 01ஆம் பிரிவு, யூனியன் வீதியில் அமைந்துள்ள அகமட் முகைதீன் அகமட் றஸ்மி என்பவரது வீட்டின் மீதே குறித்த தாக்குதல் சம்வம் இன்று (10) செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் வீட்டின்; முன் ஜன்னலகளின்; கண்ணாடிகள உடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த சிறு உபகரணங்களும் சிலவற்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வீட்டின் மீது கடந்த செவ்வாய்க்கிழமையும்(03) இதே பாணியில் அமைந்த தாக்குதல் சம்பவம் குறித்தும் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தாக்குதல் இடம்பெற்றுள்ள வீட்டின் உரிமையாளர் கடந்த காலங்களில் அரசியல் செயற்பாட்டாளராக இருந்து வந்துள்ளதுடன், அரசியல் தொடர்பான விமர்சன கட்டுரைகள், நேர்காணல்கள்களை இணையத்தளங்களில் செயலாற்றிவந்துள்ளார்.
தற்போது இவர் வெளிநாடு ஒன்றில் தொழில் புரிந்து வரும் நிலையில், அவரது தந்தையும், தாய் மற்றும் மனைவியும் அவ்வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -