கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2019ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் பல்துறைக் கலைஞர்கள், இலக்கியவாதிகள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதில் இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ள 10 பேரில் இலக்கியம் மற்றும் ஆய்வு துறையில் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் முன்னாள் பணிப்பாளரும் ஆய்வு இலக்கியத்துறையில் செயல்பட்டாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் "கல்முனை மாநகரம் உள்ளூராட்சியும், சிவில் நிருவாகம்"(2015),
"முன்னாள் வர்த்தக வாணிப துறை அமைச்சர் "ஏ.ஆர்.மன்சூர் வாழ்வும் பணிகளும்" ஆகிய இரு நூல்களை வெளியிட்டதுன் நவமணி பத்திரிகையில் ஒவ்வோரு கிராமங்களின் வரலாற்று தொகுப்பு என்ற தொடர் கட்டுரையை எழுதி வந்தமையும் குறிப்பிட்டத்தக்கது.
இக்கௌரவிப்பு நிகழ்வில் வித்தகர் விருது, சிறந்த நூலுக்கான பரிசு, இளங்கலைஞர் விருது, அரச படைப்பாக்கம் ஆகிய விருதுகளுக்கு தெரிவாகியுள்ளவர்களின்
பெயர் விபரத்தை கிழக்குமாகாணபண்பாட்டலுவல்கள் திணைக்களம் உத்தியோக பூர்வமாக அண்மையில் வெளியிட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
பறக்கத்துள்ளாஹ் அவர்களுக்கு இம்போட் மிரர் ஊடக வலையமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.