ஒரு கால் இல்லாமல் தேசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற சாதனை வீரர்


பழுலுல்லாஹ் பர்ஹான்-

னக்கு ஒரு கால் இல்லாத போதும் விளையாட்டுக்கு ஊனம் எவ்விதத்திலும் தடை கிடையாது என்பதை நிரூபித்து தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த சாதனை வீரர் எம்.எம்.அஹமட் அனீக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும்,முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக்கினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

மேற்படி நிகழ்வு நேற்று 07 சனிக்கிழமை இரவு புதிய காத்தான்குடியிலுள்ள இவ் விளையாட்டு வீரரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் சிப்லி பாறூக்கினால் சாதனை வீரர் எம்.எம்.அஹமட் அனீக் பொன்னாடை போர்த்தி பணப் பரிசு வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் சிப்லி பாறூக் இங்கு கருத்து தெரிவிக்கையில் .......

தனக்கு ஒரு கால் இல்லாத போதும் தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த சாதனை வீரர் எம்.எம்.அஹமட் அனீக் இன்னும் பல சாதனைகளை புரிவதற்கும்,எதிர் காலத்தில் விளையாட்டு துறையில் அரச தொழில் ஒன்றை பெறுவதற்கும் தன்னால் முடியுமான உதவிகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ் கௌரவிப்பு நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஜஹானி,ஊடகவியலாளர் டீன் பைறூஸ்,சமூக ஆர்வளர்களான என்.எம்.எம்.பாயிஸ்,எம்.ஏ.எம்.பெறோஸ்,எம்.எஸ்.சிறாஜ் (நஸீர்) உட்பட சாதனை வீரர் எம்.எம்.அஹமட் அனீக்கின் குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

குறித்த விளையாட்டு வீரர் தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் 100 மீற்றர் ஓட்டம்,200 மீற்றர் ஓட்டம்,நீளம் பாய்தல் போன்ற மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்று மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -