புல்மோட்டை சின்னலுப்பைக் குள புனர்நிர்மாணத்தால் விவசாய நிலங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளது

ஹஸ்பர் ஏ ஹலீம்-கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும்,துறைமுகங்கள் கப்பல்துறை பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்றூப் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக கம்பெரலிய வேலைத்திட்டத்தினூடாக 1.9 மில்லியன் ரூபா நிதியில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புல்மோட்டையில் உள்ள சுமார் 60 வருடம் பழைமையான சின்னக்கல்லிலுப்பைக்குளம் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது, இதற்கான திட்டம் இன்றுடன் (08) முடிவடைந்துள்ளது.
இதனால் இப்பிரதேசத்தில் உள்ள மேலும் பல நூறு ஏக்கர் வயல் நிலம் நீர்பாசனத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் கிட்டுகின்றது என எதிர்பார்க்கப்படுகிறது
விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்சினைக்கான தீர்வாக இது அமைந்துள்ளது.அதிகமான விவசாய நிலங்கள் தங்களது நெற்செய்கைக்கான போதுமான நீரினை பெறுவதற்கு உகந்ததாகவும் காணப்படுகிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -