திருக்கோவில் பிரதேசசெயலக நிருவாக உத்தியோகத்தராக திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா பதவியேற்பு.

காரைதீவு நிருபர் சகா-
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய நிருவாக உத்தியோகத்தராக காரைதீவைச் சேர்ந்த திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா இன்று(9) திங்கட்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.
பொதுநிருவாக அமைச்சு இந்நியமனத்தை வழங்கியது.
இப்பதவியேற்புநிகழ்வு இன்று திங்கட்கிழமை திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. அருகில் உதவி பிரதேசசெயலாளர் கந்தவனம் சதிசேகரனும் உடனிருந்தார்.

காரைதீவு பிரதேச செயலகத்தில் பதவிநிலை உத்தியோகத்தராகவிருந்த திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா அண்மையில் நடைபெற்ற சுப்பறாதரத்திற்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தமையையடுத்து நிருவாக உத்தியோகத்தராக பதவியுர்வுபெற்று நியமிக்கப்பட்டார்.

கொழும்பில் இருவாரகால பயிற்சியை கடந்த வாரம் நிறைவுசெய்தபின்னர் இன்று தனது கடமையினை புதிய அலுவலகமான திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவ்வமயம் அவரது துணைவர் ஓய்வுநிலை பாடசாலைகள் வேலைகள் பரிசோதகர் த.கணேசராஜாவும் அவரது புத்திரி செல்வி க.தனுசனாவும் புத்திரன் க.கேதீக்சனும் சமுகமளித்திருந்தனர்.
பதவியுயர்வு பெற்றுச்செல்லும் திருமதி ஜெயசுந்தரியை காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் வாழ்த்திவழியனுப்பினார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -