சடலங்களை தோண்டி மண்டை ஓடுகள் எடுப்பு - வெலிங்டன் தோட்டத்தில் பரபரப்பு

க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனிபீல்ட் தோட்டம் வெலிங்டன் பிரிவில் அத்தோட்ட பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 சடலங்கள் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அத்தோட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெலிங்டன் தோட்டத்தில் நபர் ஒருவர் 01.09.2019 அனறு காலை புல்லு வெட்ட இப்பகுதிக்கு வருகை தந்திருந்த வேளையில் சடலங்கள் தோண்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பில் ஊர் மக்களுக்கும் அறிவித்த அந் நபர் அட்டன் பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

சம்பவத்தை கேள்வியுற்ற அட்டன் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதில் 24, 68, 70 ஆகிய வயதுகளுடைய உடலங்களில் எச்சங்கள் அங்கிருந்து எடுத்து கொண்டு சென்றுள்ளதாகவும், அனேகமாக மண்டை ஓடுகளை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் ஒரு சடலம் புதைக்கப்பட்டிருந்த குழியை தோண்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெலிங்டன் தோட்டத்தில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -