கடந்த 2017ம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீடு 18 இலட்சம் ரூபா செலவில் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் வீதியின் இருபக்கங்களுக்காமான வடிகான் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.எனினும் இலங்கை மின்சார சபையின் மின் கம்பங்களை உரியவாறு அகற்றுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை விட அதிக நிதி தேவைப்பட்டதன் காரணமாக இந்த வடிகான் வேலைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது காணப்பட்டது.இதனால் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இவ்விடயங்களை தொடராக அமைச்சரின் கவனத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் கொண்டுவந்து தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.அந்த வகையில் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்ளின் பணிப்புரைக்கு அமைய கடந்த பெப்ரவரி மாதம் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் அபிவிருத்திகளுக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் ஏ.சீ.எம்.நபீல்(SLAS) அவர்களை நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் நேரில் அழைத்து வந்து குறித்த வீதியின் நிலையினை தெளிவாக விளக்கினார்.அந்த முயற்சியின் பலனாக அவ்வடிகான் வேலைகளை பூர்த்தி செய்வதற்காக ரூபா 7.5 மில்லியன் மேலதிக நிதியானது அமைச்சர் றவூப் ஹக்கீம் மூலமாக நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வேலைகலானது காத்தான்குடி நகரசபை ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

