"அரசியல் களங்களின் சம காலப் பார்வை" எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகக் கருத்தரங்கு, எதிர்வரும் (30) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, கொழும்பில் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் மத்திய கொழும்பு அமைப்பாளர் உவைஸ் ஹாஜியார் தலைமையில் இந்தக் கருத்தரங்கு, கொழும்பு - மருதானை, இலக்கம் 520, இரண்டாம் பிரிவில் இடம்பெறும்.
இக்கருத்தரங்கிற்கு, தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் தீர்மானிக்கும் சக்தியை எந்த அணியில் இணைந்து பலப்படுத்தலாமென்பது குறித்தும், இக்கருத்தரங்கின்போது ஊடகவியலாளர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்படவுள்ளன.
பத்தி, புலனாய்வு எழுத்தாளர் ஐ. முஸ்டீன் (மொஹமட்) இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
