பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூபின் அறியாமையா அல்லது மடமைத்தனமா -கேள்வி கேட்கிறார் நவ்பர் Mps


எப்.முபாரக்-
பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூபின் அறியாமையா அல்லது மடமைத்தனமா- பிரதேச சபை உறுப்பினர் நவ்பர்

கப்பல்துறை காணியில் வீடமைப்பு திட்டத்துக்காக அடிக்கல் நாட்டியது பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூபின் அறியாமையா அல்லது மடமைத்தனமா என தெரியவில்லை என திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் நப்வர் தெரிவித்தார்.

இன்று ஜும்மா தொழுகையின் பின் கப்பல்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
இந்த இடத்தில் மூவின மக்களுக்குமான வீடமைப்பு திட்டமொன்றை ஆரம்பிக்க நான் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அவர் திருகோணமலை மாவட்ட வீடமைப்பு அதிகார சபையிடம் அனுமதி பெற்று திருகோணமலை பிரதேச செயலாளர் அவர்களினால் இனம்காட்டப்பட்ட காணியில் 2019-03-31 ஆம் திகதி வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகள் பங்களிப்புடன் அடிக்கல் நடப்பட்டது

அத்துடன் வீடமைப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட முகாமையாளரால் 20119-03-29 ஆம் திகதி குறிப்பிட்ட காணியை அளவீடு செய்ய ஏற்பாடு செய்யுமாறு பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கபட்டு அடிக்கல் நடுகையுடன் இந்த வீட்டு திட்டத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகள் யாவும் பூர்த்தி செய்யப்படன.

அதை தொடர்ந்து தற்போது வீடமைப்பு திட்டத்துக்காக தெரிவுசெய்யபட்ட பயனாளிகள் தமது சொந்த பணத்தின் மூலம் இக்காணியை துப்பவரவாக்கிக் கொண்டிருக்கும் சந்தர்பத்தில் நேற்று இந்த காணியில் பிரதியமைச்சர்’ அப்துல்லா மஹ்ரூப் தான் வீடமைப்பு திட்டமொன்றை மேற்கொள்வதாக கூறி அடிக்கல் நட்டுல்லதை அறிந்தேன்.

இது பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூபின் அறியாமையா அல்லது மடமைத்தனமா என தெரியவில்லை என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -