DO நியமனம் திருகோணமலைக்கு வெளியில் நியமனம் பெற்றவர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணியாற்ற உத்தரவு



ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்ற அனைவரையும் தங்களது சொந்த மாவட்டத்தில் கடமைகளை பொறுப்பேற்று பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

திருகோணமலையில் அண்மையில் நியமனம் பெற்ற 193 பட்டதாரி பயிலுனர்களில் நியமனத்தின் போது பலர் திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியில் உள்ள திணைக்களங்களில் தங்களது கடமைகளை பொறுப்பேம்குமாறு கடிதங்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது இது விடயமாக பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்றவர்கள் பிரதியமைச்சரின் கவனத்திற்கு தங்களது சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு நடவடிக்கைகளை பெற்றுத் தருமாறு கோரியிருந்தனர்.

இதனை கருத்திற் கொண்ட பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தேசிய கொள்கைகள் பொருளாதார,மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதியை இன்று(05) மாலை கொழும்பில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் வைத்து சந்தித்து திருகோணமலை மாவட்டத்துக்கு வெளியில் நியமனங்கள் பெற்றவர்களை திருகோணமலையில் பணிக்கு அமர்த்துமாறு கோரிக்கை விடுத்ததையடுத்து உரிய அதிகாரிகளான மாவட்ட அரசாங்க அதிபர்,கிழக்கு ஆளுனரின் செயலாளர்,பிரதம செயலாளர் ஆகிய அதிகாரிகளுக்கு செயலாளர் கடிதம் மூலமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் தங்களது மாவட்டத்திலே கடமைகளை பொறுப்பேற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
எனவே திருகோணமலை மாவட்டத்துக்கு வெளியில் பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்ற அனைவரும் உரிய அதிகாரியை சந்தித்து திருகோணமலையில் கடமைகளை பொறுப்பேற்குமாறு பிரதியமைச்சர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -