இன்று உயர் தர பரீட்சை எழுதச் சென்ற இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

ன்று (05) ஆரம்பமான கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தர பரீட்சையில் தோற்றுவதற்காக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (05) பரீட்சை நிலையத்திற்கு சமூகமளித்திருந்தார்.

இன்று ஆரம்பமான பரீட்சைக்கு, கோட்டே ஆனந்த பாலிகா வித்தியாலயத்திற்கு தனிப்பட்ட விண்ணப்பதாரியாக தோற்றிய அவர், கிறிஸ்தவ பாட பரீட்சைக்கு தோற்றுவதற்காக அங்கு சமூகமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய பாடங்களாக அரசியல் மற்றும் ஊடக பாட பரீட்சைகளுக்கும் அவர் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1981 இல் முதன் முறை க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய அவர், 38 வருடங்களின் பின்னர் மீண்டும் உயர் தர பரீட்சைக்கு தோற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக அவர் தனிப்பட்ட ஆசிரியரிடம் பயின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் உயர் தர பரீட்சையின் முதலாவது அமர்வில் ஒரேயொரு பாடத்தில் மாத்திரம் சித்தியடைந்ததாக தெரிவித்திருந்ததோடு, இம்முறை பரீட்சையில் சித்தியடைந்தால் தான் ஒரு சட்டத்தரணியாக வர விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.thinkaran
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -