கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்திலுள்ள அல் ஹிஜ்றா வித்தியாலயத்தில் காணப்படும் சிறுவர் விளையாட்டு உபகரணங்களை ஒழுங்கமைத்து மாணவர்கள் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
கழகத்தின் தலைவரும் ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளருமான யூ.எல்.அஹமட் லெப்பையின் தலைமையில் நடைபெற்ற இவ் வேலைத்திட்டத்தில் பாடசாலை வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசியும் கொடுக்கப்பட்டது.
குறித்த தேவைப்பாட்டை ரேஞ்சர்ஸ் கழகத்தினர் முன்வந்து மேற்கொண்டமைக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஸாபிர் பாடசாலை சமூகம் சார்பாக கழக உறுப்பினர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

