கல்முனை மாநகர சபையின் தெற்கு எல்லை பற்றியது?

பொறியியலாளர் ஜௌஸி அப்துல் ஜப்பார் அவர்களது முகநூல் பக்கத்திலிருந்து.....
ல்முனை மா நகர சபைக்குச் சொந்தமான அதன் தெற்கு எல்லையை கபளீகரம் செய்து காரைதீவு பிரதேச சபை உருவாக்கப்பட்டிருந்த போதிலும் சட்டரீதியாக குறித்த எல்லை கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமானது என்பதை கீழேயுள்ள ஆக்கம் விபரிக்கின்றது.
இதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகார மையங்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி குறித்த பிரதேசத்தின் நிருவாகத்தைக் கல்முனை மா நகர சபையின் கீழ் கொண்டுவருவதற்கு அழுத்தம் வழங்கும் நோக்கம் கருதி இந்தப் பதிவு மேற்கொள்ளப்படுகின்றது.
கல்முனை மாநகர சபை தெற்கு எல்லையானது அதன் உத்தியோக பூர்வ வர்த்தமானிப் பிரசுரத்தின் படிக்கு கடற்கரையில் இருந்து மாளிகைக்காடு வீதி மத்திய கோட்டினூடாக பிரதான வீதிவரை சென்று அங்கிருத்து பிரதான வீதியின் மத்திய புள்ளியூடாக காரைதீவு சந்திவரை சென்று அங்கிருந்து சம்மாந்துறை செல்லும் பிரதான வீதியின் மத்தியூடாகச் சென்று மாவடிப்பள்ளியிலுள்ள நிலப்பிரதேசத்தைச் சுற்றிச் சென்று மீண்டும் பிரதான வீதியின் மத்தியகோட்டின் வழியே வெட்டையாறு குறுக்கிடும் மதகின் மத்திய புள்ளிவரை குறிப்பிடப்படுகின்றது. ( படம் - 3) .
மேற்படி எல்லையானது காரைதீவு சாய்ந்தமருது எல்லை வீதியான மாளிகைக்காடு வீதியின்மத்தியபுள்ளியூடாக பிரதான வீதிவரை சென்று அங்கிருந்து மேற்குத் திசையில் ஒரு நேர்கோட்டினூடாக வெட்டையாறுவரை நீட்டப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது . (படம்- 4)
1987.05.12 ஆம் திகதிய 453/19 ஆம் இலக்க வர்த்தமானிப் பிரசுரம் மூலம் உருவாக்கப்பட்ட கல்முனை பிரதேச சபையின் எல்லைகள் 1998.12.11 இல் மேற்கொள்ளப்பட்ட 1057/16 இலக்க வர்த்தமானிப் பிரசுரம் மூலம் நகரசபையாகதரமுயர்த்தப்பட்டதிலிருந்து பின்னர் 2001.06.11 ஆம் திகதிய 1188/1 இலக்க வைத்தமானி அறிவித்தல் மூலம் மா நகர சபையாக தரமுயர்த்தப்படும் வரை மாற்றம் பெற்றிருக்கவில்லை .
இருந்த போதும் 2006 ஆம் ஆண்டு காரைதீவு பிரதேச சபைக்கான வர்த்தமானிப் பிரசுரம் மேற்கொள்ளப்பட்ட போது கல்முனை நகர சபை மற்றும் மா நகர சபையின் தெற்கு எல்லையின் ஒரு பகுதியை காரைதீவு பிரதேச சபையுடன் சேர்த்துள்ளனர்.
2006 ஆம் ஆண்டின் பின்னர் மேற்படி விடயம் சர்ச்சையில் இருந்த போதும் ,இது பற்றிய சட்டத் தெளிவின்மையால் கல்முனை மா நகர முதல்வர்கள் மேற்குறித்த விடயத்தில் பாராமுகமாக இருத்து வந்துள்ளனர் .

1987 ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 2.0 ம் பிரிவின் படிக்கு பிரதேச சபை ஒன்று உருவாக்கப்படும் போது மா நகர சபையின் எல்லைகள் நீங்கலாக அது அமைக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே காரைதீவு பிரதேச சபை வர்த்தமானிப் பிரசுரத்தின் போது சேர்க்கப்பட்ட எல்லைகள் மேற்படி சட்டத்தின்படிக்கு கல்முனை மா நகர சபைக்கு உரியனவாகும். (படம்- 1)
2013 / 2014 காலப்பகுதியில் கல்முனை மா நகர சபைக்கான " நகர அபிவிருத்தித் திட்ட" வரைபு வேலைகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப் பட்டபோது கல்முனை மா நகரத்தின் வரைபடத்தைத் தயாரிப்பதில் சர்ச்சை நிலவியது. இதன் போது கல்முனை மா நகர சபை சார்பாக மா நகர சபையாக வர்த்தமானிப் பிரசுரம் செய்யப்பட்ட எல்லைகளே வரைபடத்தில் காட்டப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட உத்தியோகத்தர்களின் ஆலோசனை பெற்று மாநகர சபையின் எல்லைகளை அதன் வர்த்தமானிப் பிரசுரத்திற்கு ஏற்ப தயாரித்திருந்தது . பின்னர் மேற்படி நகர அபிவிருத்தித்திட்டம் அன்றைய நகர அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ் இனால் அங்கீகாரம் வழங்கப்பட்டு 2014.06.23 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி இல1868/8 இன் மூலம்
வர்த்தமானிப்பிரசுர்ம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ( படம்-2)
எனவே கல்முனை மா நகர சபைக்குரிய மேற்படி பிரதேசத்திற்குரிய நிருவாக நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச சபை மேற்கொள்ள முடியாது என்பது பிரதேச சபைகள் சட்டத்தின் மூலமும் , கல்முனை நகரத்துக்கான வர்த்தமானிப் பிரசுரம் செய்யப்பட்ட நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலமும் தெளிவாகுவதால் மேற்படி நிருவாகப் பிரதேசத்திற்குரிய உரிமையை உரிய வழிவகைகளை மேற்கொண்டு கல்முனை மா நகர சபையின் கீழ் கொண்டுவருமாறு கல்முனை மேயர் கௌரவ ஏ.எம் றக்கீப் அவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எச் எம் எம் ஹரீஸ் அவர்களையும் வினயமாக வேண்டிக்கொள்கிறோம்.
எல்லைகள் பற்றிய வர்ணனைகளை அறித்துகொள்ள இது விடயமாக இரண்டுவருடங்களுக்கு முன்னர் என்னால் எழுதப்பட்ட இந்தப் பதிவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.https://m.facebook.com/story.php?story_fbid=10213697033076206&id=1116406264






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -