இலங்கை விமானப்படையின் தளபதி ஏயாா் மாா்சல் டி.எல்.எஸ். டயஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் ரணவிரு உதவி இஸ்லாமிய நிகழ்வு இன்று (07.08.2019 நடைபெற்றது.
இந் நிகழ்வில் கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளா் சபைத் தலைவா் கலீல் மொகமட், பிரதித் தலைவா் முஸ்லீம் சலாகுதீன், செயலாளா் .ஜ.எஸ்.கமீடும் கலந்து கொண்டனா்.
இந் நிகழ்வில் இலங்கை விமானப்படையில் உயா் அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் விமானப்படை அதிகாரிகளும் வட கிழக்கு பிரதேசத்தில் நடைபெற்ற யுத்ததில் விமானப் படையில் பணியாற்றி உயிா் நீா்த்த முஸ்லிம் விமான ஓட்டி மற்றும் விமானபடை விசாரனை அதிகாரி ஆகியோா்களது உறவினா்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா்.
இந் நிகழ்வின்போது விமானப் படையில் இருந்து உயிா் நீத்தவர்களுக்காக துஆப் பிராத்தனையும் இடம் பெற்றது. அத்துடன் உயிா்நீத்தவா்களுக்கான உதவித் திட்டமும் விமானப்படைத் தளபதியினால் அவா்களது குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு உயிர் நீத்த விமானப்படை விசாரனை அதிகாரி யசாாின் தாய் கருத்து தெரிவிக்கையில் - எனது மகனும் நானும் 1990களில் மன்னா் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அவா் விமானப்படையில் இணைந்தாா். அதன் பின் அவா் பலாலியில் விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டதால் அதனை பரிசோதனைக்காக சக அதிகாரிகளுடன் அங்கு சென்ற சமயத்தில் அவா் பயணித்த ஜீப்புடன் விடுதலைப் புலிகளின் குண்டுத்தாக்கலுக்குள்ளாகி அவ்விடத்தில் மரணித்துள்ளாா். கடந் 23 வருடமாக அவரின் சேவைக்காக விமானப்படையில் இருந்து மாதாந்த ஊதியம் வழங்குகின்றனா். இருந்தும் ஒரு முஸ்லிம் தாய் என்ற ரீதியில் எனது மகன் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகவே உயிா்நீத்து்ளளாா். இந்த நாட்டில் முஸ்லீம்களும் யுத்த வெற்றிக்கு பங்கு கொண்டுள்ளாா்களை என்பதனையும் என்னுடன் இங்கு சமுகமளித்த முஸ்லிம் விமான ஓட்டி மற்றும் விமானபடைகளின் தாய் மாா் நானும் ஒரு வீரத்தாய் எனவும் கருத்து தெரிவித்தாா்.








