விசேட தேவையுடையோருக்கு சமூகத்தில் சம வகிபாகம் வழங்கப்பட வேண்டும்



பாறுக் ஷிஹான்-

விசேட தேவையுடையோருக்கு சமூகத்தில் சம வகிபாகம் வழங்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவில் இணைப்பாளர் ஏ. எல் இஸ்ஸதீன் தெரிவித்தார்.

புதன்கிழமை (7) காலை நாவிதன்வெளி கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற விசேட தேவையுடையோருக்கான செயலமர்வில் இக் கருத்தை முன்வைத்தார்.

அங்கு தொடர்ந்து பேசுகையில்

விசேட தேவையுடையோருக்கு சமூகத்தில் சம அந்தஸ்து வகிபாகம் வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் விசேட தேவையுடையோர் தேவைப்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அவர்களையும் இணைத்துக் கொண்டு சமூக செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

எங்களை நாங்களே இரண்டாம் தர பிரஜையாக தாழ்த்திக் கொண்டு இருக்ககூடாது.சமூக செயற்பாடுகளில் தாமாகவே முன்வந்து ஈடுபட வேண்டும்.

விஷேட தேவையுடைய இன்று நாம் வீட்டில் முடங்கி விட முடியாது நமக்கான அடிப்படைக் கல்வியை தரவேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கின்றது.விசேட தேவையுடையோர் கல்வி தொழில் வாய்ப்பு வியாபாரம் போன்றவற்றில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும். இவற்றுக்கான சட்டமூலங்கள் இப்போது பிரதேச செயலகங்களில் காணப்படுகின்றன.பல்கலைக்கழகங்களில் விஷேட தேவையுடையோருக்கு தனி பிரிவுகளும் காணப்படுகின்றன என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -