தொழில் சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார கணக்குகள் கையாளுதல் சம்பந்தமான ஒருநாள் கருத்தரங்கு


பாறுக் ஷிஹான்-
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார கணக்குகள் கையாளுதல் சம்பந்தமான ஒருநாள் கருத்தரங்கு வியாழக்கிழமை(22) காலை நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.மோகனகுமார் வளவாளராகவும் தேசிய தொழில் முயற்ச்சிக்கான அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். நிஜந்தன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது வியாபார உத்திகள் சந்தைப்படுத்தல் தொடர்பான நோக்கங்கள் சுயதொழில் ஊக்குவிப்பு தொழில்கள் தொடர்பாக வளவாளர்களால் விளக்கமளிக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -