வவுனியா மாணவர்கள் தேசியரீதியில் கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை


ண்மையில் இடம்பெற்ற தேசிய கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய மாணவன் செல்வன் மயூரன் .யதுர்சன் 135 புள்ளிகளுடன் தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் வவுனியா இறம்பைக்குளம் மகிளீர் வித்தியாலய மாணவி செல்வி .எஸ்.சப்தகி 130 புள்ளிகளுடன் தேசிய ரீதியில் ஐந்தாமிடத்தையும் பெற்று சர்வதேச ஒலிம்பியாட்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் .

மேலும் வவுனியாவில் இருந்து கலந்து கொண்ட

சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி செல்வி ரி.கபிசா 117.5 புள்ளிகளுடன் 18 ஆம் இடத்தையும்

வவுனியா தமிழ் ம.ம.வி மாணவன் செல்வன் எஸ்.கரிஸ் 116 புள்ளிகளுடன் 21 ஆம் இடத்தையும்

இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவி செல்வி ஜெ.சாகித்தியா 115.5 புள்ளிகளுடன் 22ஆம் இடத்தையும்

வவுனியா தமிழ் ம.ம.வி மாணவன் செல்வன் எஸ். சன்சய், 113 புள்ளிகளுடன் 26 ஆம் இடத்தையும்

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி செல்வி எஸ்.ஆரபி 80.5 புள்ளிகளுடன் 100 வது இடத்தையும் பெற்றுகொண்டனர்.

இவர்களை வவுனியா மாவட்ட விஞ்ஞான கள கற்கை நிலைய முகாமையாளர் அ.ஜெய்கீசன், வவுனியா தெற்கு கல்வி வலய விஞ்ஞான ஆசிரியஆலோசகர் இ.மாதவன், ஓய்வுநிலை விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ.இந்திரலிங்கம், மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -