ஹடட்ன நசனல் வங்கியின் தலைவா் திரு. தினேஸ் வீரக்கொடிக்கு ஜனாதிபதி விருதான -ஸ்ரீலங்கா சிகாமணி விருதினை 20.08.2019ல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவில் வழங்கிவைக்கப்பட்டது.
திரு தினேஸ் வீரக் கொடி ஒரு சிரேஸ்ட வர்த்தக மனிதவள முகாமைத்துவ தொழில் வாண்மையாளரும் எழுத்தாளரும் கிரமமான பத்திரிகை ஆக்கம் எழுதுபவருமாவா் . அவா் தற்பொழுது ஹடட்ன நசனல் வங்கியின் தலைவராக கடமையாற்றி வருகின்றாா். இவா் இலங்கை சர்வதேச வா்த்தக சங்கம் இலங்கை தேசிய மனிதவள அபிவருத்தி பேரவை மற்றும் கொருனுகோப்பிய ஆகிய நிறுவனங்கள் பல முக்கிய பதவிகளை வகிப்பவா்.
திரு வீரக்கொடி திறன் அபிவிருத்தி கொள்கை வகுப்பு பொருளாதார விவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி ஆகியவற்றின் பல கௌரவ ஆலோசனை வழங்கள். வகிபாகங்களின் பணியாற்றி உள்ளாா். கடந்த காலங்களில் அவா் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்களின் ஒரு ஆலோசகராகப் பணியாற்றியதோடு வங்கித்துறை மற்றும் என்.பி.எப்.ஜ. கொண்சோலிசன் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக அரசாங்கத்தினால் நியமிக்க்ப்பட்ட குழுவிற்கும் கல்விக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டை மீளாய்வு செய்வதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவுற்குத் தலைமை தாங்கினாா்.
திரு. வீரக்கொடி கொமசல் வங்கியின் ஒரு முன்னால் தலைவரும் ஊழியா் நம்பிக்கைத் சபையின் தலைவருமாவாா். அத்தோடு 2002-2004காலப்பகுதியில் பிரதம மந்திரியின் ஓர் ஆலோசகராகாவும் இருந்தாா்.
1999இல் ஒர் ஜேய்சீஸ் 10 மிகச் சிறந்த இளம் நபாா்கள் விருதையும் 2008இல் அரசாங்கத்துறையில் நல்லாட்சியின் மேம்பாட்டிற்கான அவரது பங்களிப்பு சர்வதேச லயன்ஸ் சிறப்பின் தேசிய சாதனையாளா் விருதையும் பெற்றவராகவா். 2008ஆம் ஆண்டில் அவருக்கு இலங்கை ஆளனி முாமைத்துவ நிறுவகத்தால் கௌரவ உறுப்பிணா் வழங்கப்பட்டது. திரு வீரக்கொடி பொருளியல் வங்கித்துறை மற்றும் நிதி மனிதவள தலைமைத்துவம் முகாமைத்துவம் சர்வதேச உறவுகள் மற்றும் அபிவிருத்தி விடயங்கள் ஆகியன தொடா்பாக பல நுால்களை வெளியிட்டுள்ளாா். அவா் 06 நுால்கள் எழுதியுள்ளதோடு தொடா்ச்சியாக ஒரு பொருளாதார விமா்சனங்களையும் செய்து வருகின்றாா்.
