எமது சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜாவும் தெரிவு!
நமது நிருபர்-இலங்கையின் முதலாவது ஜனாதிபதி ஊடகவிருதுக்காகக் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று(23) வெள்ளிக்கிழமை கொழும்பு ஊடகஅமைச்சில் நடைபெறவுள்ளது.
ஊடகஅமைச்சர் ருவான்விஜயவர்த்தன சான்றிதழ்களை 2018ஆம்ஆண்டுக்கான ஜனாதிபதிஊடக விருதுக்காக நியமனம்செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வைக்கவுள்ளார்.
இலங்கையின் முதலாவது ஜனாதிபதி ஊடகவிருது விழாவில் 2018ஆம் ஆண்டுக்கான இலங்கை தமிழ்ப்பத்திரிகைத்துறையில் அதிசிறந்த செய்திஅறிக்கையிடலுக்கான ஜனாதிபதி விருதுக்கு மூவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
சிரேஸ்ட ஊடகவியலாளர்களான லோறன்ஸ்செல்வநாயகம்(தினகரன்) தம்பிராஜா சகாதேவராஜா(வீரகேசரி தினகரன்); சுப்பிரமணியம்நிசாந்தன் (சுடர்ஒளி)ஆகியோரே விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களில் லோறன்ஸ்செல்வநாயகத்திற்கு விருதுவழங்கப்பட்டிருந்தது.
இவர்களுக்கான சான்றிதழ்வழங்கும் வைபவம் இன்றுநடைபெறுகிறது.
இலங்கையின் அதிஉன்னத ஊடககலாசாரத்தை நோக்கிய பயணத்தில் வரலாற்றில் முதற்தடவையாக ஜனாதிபதி ஊடகவிருது வழங்கும் விழா கடந்த 10ஆம் திகதி மாலை 4மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றமை தெரிந்ததே.
நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அவ்வரலாற்று விழாவில் தமி;ழ்மொழிமூல பத்திரிகைத்துறையில் தமிழ்மொழிமூல நான்கு பத்திரிகையாளர்கள் ஜனாதிபதி விருதுகளைப்பெற்றார்கள். விருதுக்காக நியமனம்செய்யப்பட்டவர்களுக்கு அன்று சான்றிதழ் வழங்கப்படவில்லைஅதனால் இன்று(23) அவ்வைபவம் நடைபெறஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மும்மொழியிலான தொலைக்காட்சி வானொலி பத்திரிகைமற்றும் டிஜிடல் ஊடகம் ஆகியவற்றின் சிறந்த செய்தியிடலுக்கான 2017இன் அதிசிறந்த பத்திரிகையாளன் விருது சிறந்த பத்திஎழுத்துக்குரிய 2017இன் அதிசிறந்த பத்திஎழுத்தாளன் விருது சிறந்த சிறப்புக்கட்டுரைக்குரிய 2017இன் அதிசிறந்த சிறப்புக்கட்டுரையாளர் விருது சிறந்த புலனாய்வுச்செய்திக்கான 2017இன் அதிசிறந்த புலனாய்வுச்செய்தியாளர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திப்பத்திரிகை தொலைக்காட்சி வானொலி மற்றும் இணையத்தளம் ஆகிய 4பிரிவுகளில் இப்போட்டி 2018ஆகஸ்ட்டில் நடாத்தப்பட்டது.1674விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. சுயாதீனமான நிபுணர்குழுவால் தேர்வு எவ்வித தலையீடுமில்லாமல் இடம்பெற்றதில் 48மூவின ஊடகவியலாளர்கள் தெரிவாகினர்.
இவற்றில் பத்திரிகைத்துறையில் தமிழ் சிங்கள் ஆங்கில மொழிகளில் மேற்கூறப்பட்ட 4 பிரிவுகளிலும் 12ஊடகவியலாளர்கள் தேர்வாகியிருந்தனர்.
Extract from MEDIA MINISTRY Website.
News Paper
Best News Reporting of the Year
Sinhala
Krishantha Aroshana Mannapperuma - Mawbima
T.M.Kumudu Upul Shantha - Mawbima (Daily)
Sapumal Jayasena - Mawbima (Daily)
English
Shamindra Ferdinando - The Island
Chamika Silva - Daily Mirror
Mirudhula Thambiah - Ceylon Today
Tamil
Lorence Selvanayam - Thinakaran
Thambirajah Sahadevarajah - Thinakaran and Virakesari
Subramaniam Nishantha - Sudaroli
