மின்மாற்றியை வேறிடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பு-கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு பாராட்டு

பாறுக் ஷிஹான்-
மின்மாற்றியை வேறிடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்த கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு நற்பிட்டிமுனை மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அம்பாறை நற்பிட்டிமுனை பொதுச் சந்தைக்கு அருகாமையில் நீண்ட காலமாக வைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை வேறிடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல். றபீக் மேற்கொண்ட முயற்சியை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நற்பிட்டிமுனை பிரதான வீதி பொதுச் சந்தைக்கு அருகாமையில் நீண்டகாலமாகவுள்ள மின்மாற்றியினால் மக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாக கல்முனை மாநகர சபை உறுப்பினரிடம் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் கொண்டு சென்ற தோடு இம் மின்மாற்றி பொதுச் சந்தைக்கு அருகாமையில் காணப்படுவதால் சந்தைக் கட்டடத் தொகுதி இது வரை மக்கள் பாவனைக்கு விடப்படாமல் காணப்படுவதாகவும் இதனால் நற்பிட்டிமுனை கிராம மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேற்குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு மின்மாற்றியை இடமாற்றி சீரான போக்குவரத்திற்கு வழிவகைகளை ஏற்படுத்தி தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை (1) நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -