விரைவில் இடம்பெறவுள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைக்கான வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி சட்டம் மற்றும் சமூக அபிவிருத்திக்குரிய அரசாங்கத்தின் கொள்கைகள், வாழ்வாதார அபிவிருத்திக்குரிய புதிய போக்குகள் மற்றும் தாபனவிதிக்கோவை, நிதிப்பிரமாணம் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய மாபெரும் கருத்தரங்கு சமுர்த்தி தலைமையக உயர் அதிகாரிகளினதும் தேசிய ரீதியாகவும் துறை ரீதியாகவும் தேர்ச்சி மிக்க வளவாளர்களின் நேரடி வழிகாட்டலிலும் எதிர்வரும் 14.09.2019, 15.09.2019 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் சாய்ந்தமருது பொது நூலகம் முன்னால் அமைந்துள்ள DMK அஸோஸியேட்ஸ் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ள 0755391791 அல்லது 0769867675 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு வேண்டப்படுகின்றனர்.
குறித்த பரீட்சையில் இலகுவாக சித்திபெற அனுபவம் மிக்க வளவாளர்களை கொண்டு இடம்பெறும் இக்கருத்தரங்கில் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் கடமை புரியும் அனைத்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு பயன்பெற முடியும்.
இலங்கை அதிபர் சேவை, இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, உட்பட இலங்கை சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சைகள் ஆகியவற்றுக்கு விண்ணப்பதாரிகளை சிறந்த முறையில் தயார்படுத்தி உயர்தரமான பெறுபேறுகளை பெறுவதில் கடந்த காலங்களில் பாரிய வேலைத்திட்டத்தினை DMK அஸோஸியேட்ஸ் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
DESTINATION FOR MANAGEMENT & KNOWLEDGE
LET'S CREATE BEST PROFESSIONALS TO THE SOCIETY
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -