கந்தளாயில் பௌத்த மற்றும் இஸ்லாமிய நல்லிணக்கத்தினை கட்டியெழும்பும் நோக்கில் கந்தளாய் ரஜவெவ பௌத்த விகாரையும், கந்தளாய் உலமா சபையும் இணைந்து சமய பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்சிகளில் வெற்றி பெற்றோர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று (24) ரஜவெவ பௌத்த பாடசாலையில் நடாத்தப்பட்டது.
இதில் பௌத்த மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட பேச்சு,பாடல்,சமயம் தொடர்பான சொற்பொழிகளும் நடாத்தப்பட்டன,
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கந்தளாய் பிரதேச செயலாளர்,கந்தளாய் ரஜவெவ விகாரையின் விகாராதிபதி,கந்தளாய் உலமா சபையின் தலைவர், கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்கள், அக்போபுரபொலிஸ்நிலைய பொறுபதிகாரி,சமயத் தலைவர்கள்,மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.










