முன்னோக்கிவரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு 2019 ஆம் ஆண்டில் தகுதி பெற்ற புதிய வாக்காளர் பட்டியல்கள், எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பொது மக்கள் பார்வைக்கு விடப்படவுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்டியல்கள், சகல கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பெயர்கள் இவ்வாக்காளர் பெயர்ப் பட்டியல்களில் இடம்பெற்றிருக்காவிட்டால், இது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல்களில் தத்தமது பெயர்கள் இடம்பெற்றிருந்தால் மாத்திரமே, தேர்தலில் வாக்களிக்க முடியும். இதனால், தமது பெயர் சேர்க்கப்பட்டிருப்பதை சகல வாக்காளர்களும் உறுதி செய்வது அவசியம் என்றும், ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
