--------------------------------------
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
.எந்த அசாதாரண சூழ்நிலையையும் பெரிதுபடுத்தாமல்
மனதை இலகுவாக வைத்துக்கொள்ளுங்கள்.
.
போட்டுப் பழகிய ஆடைகளையே முடியுமான அளவு தூய்மையாகவும், அழகாகவும் பேணிக்கொள்ளுங்கள். அவை புதியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
தூய்மையான வெண்மை ஆடை தன்னம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் தரும்.
.
பிரார்த்தனைகள் ரொம்ப முக்கியம்.
இறைவனிடம் உங்கள் இரண்டு வருடத் தயர்படுத்தலுக்குரிய சிறந்த பலனை வேண்டி இறைவணக்கங்களின் போது பிரார்த்தியுங்கள்.
.
போதியளவும் தூக்கம் ரொம்ப முக்கியம்.
இரவில் நேர காலத்தோடு உறங்குங்கள்.
காலையில் நேரகாலத்தோடு விழித்தெழுந்து தொழுது / வணங்கி திருப்தியான பரீட்சைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
.
வழக்கமாக நீங்கள் கற்கும்போது எடுத்த சுருக்கக் குறிப்புக்களையே ...
இறுதிநேர மீட்டளுக்காகப் பயன்படுத்துங்கள். புதிய பாஸ்ட் பேப்பர்கள், பாடக்குறிப்புக்களை கடைசிநேரத்தில் படிப்பதை முற்றாகத் தவிருங்கள்.
.
பரீட்சைக் காலத்தில் உங்கள் உணவுப் பழக்கத்தைப் பேணிக்கொள்ளுங்கள்.
புதிய, பழக்கமில்லாத உணவுகளை உட்கொள்வதையும்,
அதனால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிருங்கள்.
.
காய்ச்சல், தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் ...
உடனடியாக மருத்துவரை நாடி வைத்திய உதவியும், ஆலோசனையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
.
நேரகாலத்தோடு எழுது கருவிகளைத் வாங்கி எழுதிப் பழகி இலகுவாக்கிக் கொள்ளுங்கள்.
.
.மேற்குறித்த பொதுவான விடயங்களுடன் பரீட்சை நாட்களில்;
--------------------------------------------------------------------------------------------------
.
காலை 5 / 6 மணிக்கு முன்பே விழித்தெழுங்கள்.
.
முடியுமான அளவு பிரார்த்தனைகளில் ஈடுபடுங்கள்.
.
எப்போதும் காலையில் இடியப்பம் போன்ற இலேசான உணவுகளையே உட்கொள்ளுங்கள்.
.
காலை 8:30 மணிப் பரீட்சைக்கு 8 மணியளவில் பரீட்சை மண்டபத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள்.
.
பரீட்சை எழுதத் தேவையான தேசிய அடையாள அட்டை, அனுமதிப்பத்திரம், எழுது கருவிகள் என்பவற்றை முதல் நாள் இரவே தயார்படுத்தி வையுங்கள்.
காலையில் ஒருமுறை வீட்டிலிருந்து வெளியேறுமுன் சரிபாருங்கள்.
.
ஒவ்வொரு பரீட்சையின் ஆரம்பத்திலும், இறுதியிலும் ...
இறைவனைப் பிரார்த்தியுங்கள், இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
.
நடந்து முடிந்த பரீட்சையைப் / பாடத்தைப் பற்றி சிந்திப்பதைத் தவிருங்கள்.
.
சக மாணவ நண்பர்களுடன் சேர்ந்து ...
பரீட்சை நிறைவுற்றதும் விடைகளைச் சரிபார்ப்பதை முற்றாகத் தவிருங்கள்.
.
.
பரீட்சை வினாத்தாள் வழங்கப்பட்டதும்:
---------------------------------------------------------------
.
முதல் 15 நிமிடங்களில் எல்லா வினாக்களையும் பொறுமையாக வாசித்து
உங்களால் சிறப்பாக விடையளித்து அதிக புள்ளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என
உங்கள் மனம் சொல்லும் வினாக்களை அவற்றின் இலகுத்தன்மை அடிப்படையில் இலக்கமிடுங்கள்.
.
அதனடிப்படையில் ஒவ்வொரு வினாவுக்கும் உரிய நேரம் செலவழித்து விடையளியுங்கள்.
.
எழுதிப் பழக்கப்பட்ட பேனாக்களையே உங்கள் பரீட்சைக்குப் பயன்படுத்துங்கள்.
முற்றிலும் புதிய பேனாக்கள் வேகமாக எழுதுவதற்கு சிரமத்தை உண்டுபண்ணும்.
.
இறுதி 15 நிமிடங்களில் தெரிவுசெய்யப்பட்ட வினாக்களுக்கெல்லாம் முறைப்படி திருப்தியாக விடையளித்துள்ளோமா என்று ஒருமுறை சரிபாருங்கள்.
S.M. Mohamed SANZEIR.
02.08.2K19, FRI.