டயகம சந்திரகாமம் தோட்டத்தொழிலாளர் குடியிருப்பில் திடீர் தீ 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசம் 45 பேர் நிர்கதி.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
யகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திரகாமம் தோட்டத்தில் 05.08.2019 இரவு 7 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 12 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேளை பரவிய தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தோட்ட இளைஞர்கள் மற்றும் பொலிஸார் இரண்டு மணிநேர கடும் முயற்சி செய்த போதிலும் முயற்சி பலனளிக்கவில்லை.
இதன் போது வீட்டில் இருந்த பெருமதி மிக்க அனைத்து பொருட்கள் அத்தியவசிய ஆவனங்கள் தங்க நகைகள் தளபாடங்கள் உடுதுனிகள் ,பாடசாலை மாணவர்களின் பாடசாலை உபகரணங்கள் சீர் உடைகள் உட்பட அனைத்தும்; தீக்கிரையாகியுள்ளதாக சம்பந்தப்பட்ட குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் தெரிவித்தனர.;
இந்த தீ விபத்து காரணமாக 12 குடும்பங்களைச ;சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட பாடசாலை மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகள் மற்றும் நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன
குறித்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என உறுதிப்படுத்தப்படாத போதிலும் மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இத் தீவிபத்து ஏற்படுவதற்கான காரணத்தினையும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -