இன்று காரைதீவில் பாரைக்குட்டி மீன்மயம்: கடற்கரை தீர்த்தக்கரையாகியது: ஒருவருக்கு 10ஆயிரம் கிலோமீன்

காரைதீவு நிருபர் சகா-
காரைதீவில்இன்று (31)சனிக்கிழமை பலலட்சக்கணக்கான பாரைக்குட்டி மீன்கள் பிடிபட்டன.
காரைதீவுக் கடற்கரைதீர்த்தக்கரையாக மாறியது. பார்க்குமிடமெல்லாம் சனக்கூட்டம்.பல மீனவர்களுக்கு மாறிமாறி மீன்கள் அகப்பட்டன. பி.நமசிவாயம் என்ற மீனவருக்கு சுமார் 10ஆயிரம் கிலோ பாரைக்குட்டி மீன்கள்; பிடிப்ட்டன.
அண்மைக்காலமாக 1கிலோ மீன் 350ருபாவிற்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று கடலோரத்தில் இலவசம். ஊருக்குளட மீன்விற்பவர்கள் ஒருகிலோ 150வுக்கு விற்றனர்.
வலையிலிருந்து தவறிய மீன்களை எடுத்து ஒரு லட்சருபாவுக்கு விற்ற பொதுமகனும் இருக்கிறார். கடற்கரையோரமெல்லாம் மீன்மயம். சிறுவர்களும் கையால் மீன்களை துடிக்கத்துடிக்க மகிழ்சியுடன் பிடித்தனர்.

நீண்டநாட்களுக்குப்பிறகு மீனவர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சி நிலவுகிறது. 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -