எச்.எம்.எம்.பர்ஸான்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ.ஆர்.முகைதீன் ஆசிரியரின் அர்ப்பணிப்புக்கு விசேட பாராட்டும் கௌரவிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளராக சேவை புரியும் இவர் பாடசாலை கல்வி வளர்ச்சிற்கும் புறக்கீர்த்திய செயற்பாடுகளுக்கும் தனது நேரத்தை பனயன்படுத்தி அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றார்.
குறுகிய காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்காற்றிய ஏ.ஆர். முகைதீன் ஆசிரியருக்கு கடந்த 4 ம் திகதி நடைபெற்ற ஆயிஷா வித்தியாலயத்தின் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.