கல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை






பாறுக் ஷிஹான்-ம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (19) நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் மாலை 5:30மணி அளவில் இடம்பெற்றது.
இதன்போது அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கட்சி பிரமுகர்களை சந்திக்கும் இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் அவரது மகனும் பிரதேச சபை உறுப்பினருமான கலையமுதனும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த கட்சிக் கூட்டத்திற்கு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அம்பாறை மாவட்ட அக்கட்சி சார்பான மாநகர சபை பிரதிநிதிகள் இளைஞர் அணி என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்ற போதிலும் ஏற்பாட்டாளர்களால் செய்தி சேகரிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -