ஶ்ரீலங்கா பொதுஐன முன்னணி கட்சியின் யாழ் பிரதான அலுவலகம் திறப்பு

பாறுக் ஷிஹான்-
ஶ்ரீலங்கா பொதுஐன முன்னணி கட்சியின் யாழ் பிரதான அலுவலகம் ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்வினால் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு திங்கட்கிழமை(29) பயணம் மேற்கொண்டுள்ள ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குழுவினர் காலை 10 மணியளவில் நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீ விமல தேரரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் குறித்த அலுவலகத்தை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தனர்.

இதன் போது திறப்பு விழாவில் விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மக்களுடனான சந்திப்புகளும் அங்கு இடம்பெற்றன.இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சமூகமளிக்கவில்லை ஏனைய ஶ்ரீலங்கா பொதுஐன முன்னணி கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தம்பிதுரை ரஜீவ் தலைமையில் கட்சியின் மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் இங்கு உடனிருந்தனர்.

மேலும் இன்று யாழ் ஆயர் இல்லம் இ நல்லூர் ஆதின குரு முதல்வர்,முஸ்லிம் மக்கள் தரப்பு , விளையாட்டு கழகங்கள்,என்பவற்றுடன் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.அத்துடன் வடமராட்சி அங்கஜனின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மக்கள் மன்றம் ஒன்றும் அங்குரார்பணம் செய்யப்படவுள்ளது.பிற்பகல் 2.00 மணிக்கு வல்வெட்டி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் (வல்வெட்டி அலுவலகம் முன்பாக) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -