தமிழ், முஸ்லிம் கட்சிகளின் மாநாட்டை கூட்டுங்கள்- சம்பந்தனுக்கு மனோ தெரிவிப்பு...!




அமைச்சரின் ஊடகப் பிரிவு-
புதிய அரசியலமைப்பு கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும், அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற ததேகூ தலைவர் சம்பந்தனின் கருத்துகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சிகளான ஐதேக, ஸ்ரீலசுக ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்த பின்னடைவுக்கு பிரதான காரணங்கள் ஆகும்.

ஆனால் இந்த பின்னடைவுகளையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை. தென்னிங்கை பெரும்பான்மை கட்சி தலைமைகளிடம் அரசியல் தீர்வுக்கான மனோதிடம் இல்லை என நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பேயே அறிவித்திருந்தேன்.
இதை அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவிலேயே நான் பகிரங்கமாக கூறியிருந்தேன். இதை நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் சென்று தமிழ் மக்கள் மத்தியிலும் கூறியிருந்தேன்.
நான் அன்று சொன்னது, இன்று சரியானதையிட்டு நான் மிகவும் கவலையே அடைகிறேன்.
1972ம், 1978ம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள் தமிழ் மக்களின் ஒப்புதல் ஆணைகளை பெறாமல் கொண்டுவரப்பட்டவை என சம்பந்தன் கூறுவது முற்றிலும் உண்மை.
எனவே அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பை தமிழர் கோருவதில் மிக வலுவான அரசியல் நியாயம் இருக்கின்றது.

இந்நாட்டு அரசியலமைப்புகள், இந்நாட்டில் வாழும் தமிழர்களின் ஆட்சியுரிமையையும், இறைமையையும் அங்கீகரிப்பனவையாக அமைய வேண்டும்.
எனவே இன்றைய நிலையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை நோக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நியாயமான முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராகவே இருக்கின்றது.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர், இது தொடர்பான கடைசி முயற்சியாக, புதிய அரசியலமைப்பு தொடர்பில் அனைத்து தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை கூட்ட வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் யோசனையாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -