ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலை அரச வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை.. உறுப்பினர் ராமச்சந்திரன்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
ஸ்போன் தோட்ட வைத்தியசாலை அரச வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை.. உறுப்பினர் ராமச்சந்திரன்

அட்டன் ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலை அரச வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் தெரிவித்தார்
லெதண்டி கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பங்களா டிவிசனில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமாகிய பழனி திகாம்பரம் அவர்களின் ரூபாய் 05 லட்சம் நிதியொதுக்கீட்டில் விளையாட்டு மைதானம் அகலப்படுத்தி திருத்தியமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

பங்களா டிவிசன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நந்தகோபால், வள்ளுவர் விளையாட்டு கழகத்தினரின் ஏற்பாட்டில் 26/07 இடம்பெற்ற நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளராக பங்களா டிவிசனுக்கு நான் வாக்கு சேகரிக்க வந்தபோது இளைஞர்களின் பிரதான வேண்டுகோளாக இருந்த விளையாட்டு மைதானம் புனரமைத்தல் திட்டத்தை இன்று 26/07 ஆரம்பித்து வைத்துள்ளதோடு ஆலயத்திற்கு செல்லும் நடைபாதை செப்பனிடுவதிற்கும் இரண்டு லட்சம் ரூபாய் நீதி ஒதுக்கீடு செய்துள்ளேன்.

அதே போல எமது சமர்வில் வட்டாரத்திற்குட்பட்ட , ஒஸ்போன் பிரதேசத்திற்கு இந்திய வீடமைப்பு திட்டத்தினூடாக கிளவட்டன், ஒஸ்போன் மேல்பிரிவு, கீழ் பிரிவு, மீட்போட், நோட்டன் டீவிசன் ஆகிய தோட்டங்களுக்கு 100 வீடுகளை அமைக்க எனது வேண்டுகோளை ஏற்று அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்
அத்தோடு நீண்ட காலமாக. மலையக மக்கள் முகம் கொடுத்து வரும் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம் திலகராஜ் அவர்கள் தோட்ட வைத்தியசாலைகள் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்ததன் பயனாக இன்று பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அரசாங்கம் பொறுப்பேற்க சுகாதார அமைச்சினூடாக நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.
அந்த வகையில் எமது பிரதேசமான சமர்வில் வட்டாரத்தில் 06 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட ஒஸ்போன் பிரதேசத்தில் உள்ள ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலை 50 வருடங்களுக்கு மேலாக வளப்பற்றாகுறையுடன் பிரசவ வார்டுகளுடன் இயங்கியது .
பின்னர் நோயாளர்கள் 14 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கே சிகிச்சை, பிரசவம்,மற்றும் நோயாளர்கள் பரிசோதனைக்கும் செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது .

பல்வேறு அசௌகரியங்ளுக்கு முகம் கொடுக்கும் ஒஸ்போன் மற்றும் அதனை அன்டிய ஆயிரகணக்கான மக்களின் நலன் கருதி
ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலையும் அரச வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளேன் என தெரிவித்தார்
நிகழ்வில் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமாகிய பா.சிவனேசன் ஒஸ்போன் குரூப் உதவி முகாமையாளர் வள்ளுவர் கழக உறுப்பினர்கள் பொது மக்கள் என
பலரும் கலந்து கொண்டனர் .





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -