கல்முனை வடக்கு உபபிரதேசசெயலகம் தரமுயர்த்தல் பிரேரணை காரைதீவு பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்டது!



ஆதரவாக 7வாக்குகள் எதிராக 3வாக்குகள் நடுநிலை 1.
காரைதீவு நிருபர் சகா-
ல்முனைவடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்று கோரும் பிரேரணைகாரைதீவு பிரதேசசபையில் 3அதிகப்படியாக வாக்குகளால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 7வாக்குகளும் எதிராக 4வாக்குகளும் நடுநிலையாக ஒருவாக்கும் பதியப்பட்டது.அதன்படி 3மேலதிகவாக்குகளால் அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
காரைதீவு பிரதேசசபை அமர்வு இன்று(15) திங்கட்கிழமை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபையின் சபாமண்டபத்தில் நடைபெற்றது.
அதன்போது த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் திருமதி கே.ஜெயராணி இத்தரமுயர்த்தல் பிரேரணையை சபையில்சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.
அதனைசபையில் த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் த.மோகனதாஸ் முன்மொழிய ஸ்ரீ-ல.ச.கட்சி உறுப்பினர் மு.காண்டீபன் வழிமொழிந்தார்.

பின்னர் சபையில் கருத்துகளுக்கு பிரேரணைவிடப்பட்டது. சகல உறுப்பினர்களும்கருத்துக்களைக்கூறினார்கள்.

தவிசாளர் உள்ளிட்ட 7தமிழ் உறுப்பினர்களையும் 5முஸ்லிம்உறுப்பினர்களையும் கொண்ட காரைதீவுப்பிரதேசசபையில் இப்பிரேரணை விரிவாக பலராலும் ஆராயப்பட்டு அவரவர் சமுகம் சார்ந்து நியாயங்களை முன்வைத்து கருத்துரைக்கப்பட்டது.
இறுதியில் வாக்கெடுப்புக்குவிடப்பட்டபோது தவிசாளர் கி.ஜெயசிறில் திருமதி கே.ஜெயராணித.மோகனதாஸ் ச.நேசராசா மு.காண்டீபன் இ.மோகன் ஆ.பூபாலரெத்தினம் ஆகியஏழுபேரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எதிராக உபதவிசாளர் எம்.ஜாகீர் உறுப்பினர்களான எம்.இஸ்மாயில் எ.ஜலீல் எம்.றனீஸ் ஆகியோர் வாக்களித்தனர்.
மாளிகைக்காடு சுயேச்சை உறுப்பினர் எ.பஸ்மீர் நடுநிலை வகித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -