ரணில் ஆட்சியை நிலைக்கச் செய்தது அராஜக ஆட்சியை வராமல் செய்வதற்கே அன்றி ரணில் அரசை தாங்கிப்பிடிக்க வேண்டிய தேவை தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு இல்லை மக்களால் தூக்கி எறிப்பட்டவர்களுக்கு பதில் சொல்லும் தேவையும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இல்லை
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வரும் தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சனம் செய்யும் இவர்களை தமிழ்த் தேசிய பட்டியலில் இணைக்கத் தகுதி இல்லாதவர்கள் எத்தனையோ தமிழ் மக்கள் ஊடகவியலாளர்கள் புத்திஜீவிகள் காண்மல் போனதற்கு காரணமானவர்கள் எல்லோரும் இன்று மக்களை நினைத்து நீலிக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக விமர்சனம் செய்வதை நிறுத்தி விட்டு மக்களுக்கு உங்களால் என்ன செய்ய முடியுமோ அந்த நண்மைகளை செய்ய முன்வாருங்கள் எது எப்படி இருந்தாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இருக்கும் வரைதான் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் விடுதலைப்புலிகளின் ஆயுத மௌனிப்புகளுக்குப் பின் தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுத்த ராஜதந்திர நடவடிக்கைகள்தான் இன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கும் ஜனநாயக ரீதியில் தங்களது எதிர்கருத்துக்களை முன் வைப்பதற்கும் ஊன்று கோலாக அமைந்துள்ளது
தமிழத் தேசிய கூட்டமைப்பை பலமிழக்கச் செய்ய படாத பாடுபட்டுக் கொண்டிருக்கும் சில வங்குரோத்து அரசியல் கட்சிகள் கொண்டு வர நினைக்கும் ராஜபக்ஷவின் ஆட்சியில் ஜனநாயகம் சிறிதளவேனும் இருந்ததா மக்களால் எதிர்கருத்துக்களை முன் வைக்க முடிந்ததா சிறு ஆர்ப்பாட்டங்கள் இளைஞர் யுவதிகள் மனதிலும் பெற்றோர்கள் மனதிலும் பயத்துடனும் படபடப்புடனும் நாட்களை நகர்த்தி வந்ததை எவரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது
விமர்சிப்பவர்கள் விமர்சிக்கலாம் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வு மிக முக்கியம் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தவர்களை காண்மல் செய்து செட்டிகுளம் முகாமில் தஞ்சமடைந்தவர்களை சித்திரவதை செய்தவர்கள் அப்பாவி பொதுமக்களை காட்டிக் கொடுத்து அரச பணத்தில் சுகபோகம் அனுபவித்தவர்கள் எல்லாம் இன்று நல்லவர்கள் போல் நடித்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த நய வங்சகர்களை போல் மக்களை காட்டிக் கொடுத்த வேலையை தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்கும் செய்ததில்லை தமிழ் மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்தி இதையே நாங்கள் முழு மூச்சாக கொண்டு செயற்பட்டு வருகிறோம் அராஜக ஆட்சி வந்து விடக்கூடாது என்று ரணில் அரசை நிலைக்க விட்டுள்ளதே தவிர வேறு எந்த ஒரு காரணமும் இல்லை சில நாள்களுக்கு கிடைத்த அமைச்சுப்பதவி பறிபோய்விட்டது என்பதற்காக சும்மா கொக்கறிக்கக் கூடாது மக்களின் இக்கட்டான சமயத்தில் துரோகம் செய்தவர்கள் மக்களை நினைத்து நீலிக்கண்ணீர் வடிக்கவும் தேவை இல்லை உங்களைப்போன்றவர்கள் தமிழ் மக்களை வெட்டி கூறு போட்ட தீய சக்திகள் அதனால்தான் மக்கள் உங்களை ஒதுக்கி வைத்துள்ளார்கள் மக்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்