ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட மூன்று கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட M.E.H மகரூப் விளையாட்டு அரங்கின் அங்குராப்பன நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
இன்று எமது அரசாங்கத்தால் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டாலும் அவை மக்களிடம் கொண்டுசெள்ளப்படுவதில்லை இன்று காலை நானும் பிரதமரும் கிழக்குமாகாண மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்கிவிட்டே இங்கு வந்துள்ளோம் இது இங்குள்ள எத்தனைபேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது
எமது அரசாங்கமே தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்கியது. கப்பெரேலிய மூலம் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. ரன்மாவத்த மூலம் காபட் வீதிகள் அமைக்கப்படுகின்றன.
ஜனாதிபதி ஒருபுறம் பிரதமர் இன்னொருபுறம் நடுவில் என்ன செய்வது என தெரியாமல் அமைச்சர்கள் இருக்கும்போதே எம்மால் இவ்வாறு அபிவிருத்தி பணிகளை செய்ய முடியுமாக இருந்தால் எங்களது ஜனாதிபதி எங்களது பிரதமர் எங்களது அமைச்சரவை இருந்தால் எம்மால் எவ்வாறான பணிகளை முன்னெடுக்க முடியும் என்பதை இங்குள்ள ஒவ்வொருவரும் நினைத்துப்பார்க்க வேண்டும்
இவ்வாறான பணிகளை முன்னெடுக்கும் பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுகிறது. இவர்கள் எமக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைதான் எங்களை மேலும் ஒற்றுமைப்படுத்துகிறது என தெரிவித்தார்.



