எம்.எம்.ஜபீர்-
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிமின் முயற்சியின் பயனாக கல்வி அமைச்சினால் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இரண்டு மாடியில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழா இன்று (07) இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.எல்.நிஸாமுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கட்டிடத்தினை திறந்து மாணவர்களின் பாவனைக்கு கையளித்தார்.
இதில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜீத், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளருமான எம்.எம்.எம்.அன்சார், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் றியாஸ் ஆதம், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி ஜிஹானா ஆரிப், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றசீன், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவிகள், பாடசாலை அபிவிருத்தி சபை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் அவர்கள் பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.