பொய் கூறி பெற்றுக்கொண்ட உள்ளுராட்சி சபைகள் மக்களுக்கு சேவையாற்ற முடியாது -அமைச்சர் திகாம்பரம்



ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 

லையகத்தில் உள்ள தலைவர்கள் கடந்த தேர்தலின் போது பொய் கூறி பெற்றுக்கெண்ட உள்ளுராட்சி சபைகளில் மக்களுக்கு சேவையாற்ற முடியாது இருப்பதாக மலைநாட்டு புதியகிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அட்மைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கொட்டகலை மேபீல்ட் சால்மஸ் தோட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோட்ட மொழிலாளர்களை சேர்ந்த 30 குடும்பங்களுக்கு ஏழு பேச்சஸ் காணியில் 30 தனிவீடுகள் அமைபபதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(01) அமைச்சர் திகாம்பரம் தலைமையில் நடைபற்;றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில...
தொடர்ந்து உரையாற்றுகையில்; தேர்தல்காலத்தில் மலையக அரசியல் தலைவர்கள் யானை ஈ.பி.எப் ஆகியவற்றை தின்று விட்டது என்றுபொய் கூறினார்கள் மக்கள் அதனை நம்பி உள்ளுராட்சி சபைக்கு வாக்களித்தார்கள் இன்று என்ன நடந்துள்ளது.

 உள்ளுராட்சி மக்களுக்கு வேலை செய்ய முடியாதுள்ளது நாங்கள் இன்றும் மக்களை ஏமாற்வில்லை அன்றும் மக்களை ஏமாற்றவில்லை அன்றும் நாங்கள் கூறினோம் தனி வீடுகள் கட்டித்தருவதாக அதனை நான் செய்து வருகிறேன் இன்று ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டிக் முடிக்கப்பட்டுள்ளன.
இந்திய பிரமர் மொதி அவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சிகரமான விடயம் மலையக மக்களுக்காக அவர் 10000 வீடுகளை கொடுத்துள்ளார்.

 ஆகவே அந்த வீடுகளுக்கு அடுத்த மாதம் நாங்கள் அடிக்கல் நாட்டி கட்ட ஆரம்பிப்போம்.கடந்த ஐம்பது வருடமாக அரசியல் செய்த தலைவர்கள் எனன செய்தார் தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதனையே செய்து வருகிறார்கள் ஆகவே நாங்கள் ஒரு போதும் உங்களை ஏமாற்ற மாட்டோம் எதிர்வரும் தேர்தலில் மக்கள் உண்மை பேசுபவர்களை தெரிவு செய்ய முன்வர வேண்டும் அப்போது தான் எமது சமூகம் நல்ல நிலையினை அடையும் என அவர் மேலுமம் தெரிவித்தார்.

இதன் போது ஒலிரூட் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டு நலன் விசாரத்ததுடன் அவர்கள் அடுத்த வாரம் வீடுகளை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் டிரஸட் நிறுவனத்தின் தலைவர்n புத்திரசிகாமணி,உட்பட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -