முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஏ.சி.யஹ்யாகான் பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானம்!!!


டந்தகாலங்களில் அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி அரசியல் பிரபலங்களாக திகழ்ந்த எம்.எஸ்.காரியப்பர், எம்.சி.அகமட், ஏ.ஆர்.எம்.மன்சூர், அப்துல் மஜீத், மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் மற்றும் எம்.எம்.எம்.முஸ்தபா போன்றோர் அவர்களது அரசியல் வாழ்வில் அம்பாறை மாவட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பையும், இப்போதுள்ள சில அரசியல்வாதிகளின் போக்கையும் பார்க்கின்றபோது மிகுந்த கவலையான நிலை காணப்படுவதாகவும் குறித்த வெற்றிடத்தை தன்னால் நிறைவேற்ற முடியும் என தான் நம்புவதாகவும் ஆகவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ளதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயரபீட உறுப்பினரும் சமூக சிந்தனையாளருமான ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பாக தொழிலதிபர் அல் ஹாஜ் ஏ.சி.யஹ்யாகான் அவர்களுடன் பிரத்தியமாக உரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸுடன் மிகுந்த நெருக்கத்துடன் தான் இருந்து வருவதாகவும் அந்தக்கட்சி தனக்கு போட்டியிட சந்தர்ப்பத்தைத் தரும் என்று எதிர்பார்ப்பதாகவும் சாய்ந்தமருதைப் பொறுத்தமட்டில் அந்த ஊரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான வலுவான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாமையின் காரணமாகவே அந்தக்கட்சி கடந்த காலங்களில் பின்னடைவைச் சந்தித்ததாகவும் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காகவும் அந்த மக்களின் எதிர்பார்பை ஏனைய ஊர்களுக்கு பாதிப்பில்லாது பெற்றுக்கொடுப்பதனூடாக அங்குள்ள சவால்களை தன்னால் நிவர்த்திக்க முடியும் என்றும் அம்பாறை மாவட்டத்தில் பரவலாக உள்ள மக்களின் குறைபாடுகளை தன்னால் நிவர்த்தித்துக் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் தேர்தல் தொகுதிகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான பாராளமன்ற பிரதிநிதிகள் இருக்கிறார்களே என்று வினவியதற்கு, குறிப்பிட்ட சிலரது கையிலேயே பாராளமன்ற பிரதிநிதித்துவம் இருக்கவேண்டியதில்லை என்றும் மாற்று சிந்தனையுள்ளவர்களின் கருத்துக்களும் பிரதிபலிக்கும் பொருட்டு புதுமுகங்களை அறிமுகம் செய்வதனூடாக பிராந்தியத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களையும் போக்கமுடியும் என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனக்கு ஆசனம் தரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதனால் மாற்றுக் கட்சிகள் பற்றி யோசிக்கவேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் சந்திப்புக்களை நடாத்திவருவதாகவும் அதில் மக்களது பிரச்சினைகள் பலவற்றை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவற்றை நிவர்த்திக்க பாராளமன்றம் செல்லவேண்டிய தேவையுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -