கொழும்பு-12 வாழைத்தோட்டம் பெருநாள் தொழுகை

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று
கொண்டாடினர். நாட்டில் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமைகள் காரணமாக அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் அறிவுறுத்தல்களுக்கு அமையா இம்முறை பெருநாள் தொழுகைகள் வெளியிடங்களிலோ அல்லது திடல்களிலோ பள்ளிவாசல் நிருவாகங்கள் தொழுகைகளை ஏற்பாடு செய்ய வில்லை. அமைதியான முறையில் பள்ளிவாசல்களிலேயே
பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றன.
இதன்போது நடைபெற்ற பெருநாள் குத்பா உரைகளில் முஸ்லிம்கள் அமைதியாகவும், சமாதானமுமாகவும் ஏனைய சமுகங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் முஸ்லிம்கள் பெருநாளை சமய அனுஷ்டானங்களுடன் மேற்கொள்ளுமாறு வழியுறுத்தப்பட்டதுடன் எந்தவொரு முஸ்லிம்களும் வன்முறைகளுக்கோ அல்லது தீவிரவாத செயற்பாடுகளுக்கோ
உடந்தையாக இருக்காது நாட்டுப்பற்றுடன் நாட்டின் பாதுகாப்புக்கு அமைவாக
நடந்து கொள்ளுமாறும் ஏனைய சமுகங்களுடன் ஒற்றுமையாக நடந்து கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு-12 வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசலில்
பள்ளிவாசலின் தலைவர் இஸ்மத் ஹாஜி தலைமையில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பெருநாள் தொழுகையையும், குத்பா உரையையும் மௌலவி அக்ரம் அப்துல் ஹஸன் மதனி நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -