எள்ளு காய்வது எண்ணைக்கு, ஆனால் கல்முனையில் எலிப்புடுக்கு எதுக்காக காய்கிறது ?


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-

ல்முனையில் உப பிரதேச செயலகமாக இருக்கின்ற தமிழ் பிரிவை தனியான பிரதேச செயலகமாக தரம் உயர்த்தி தருமாறு கோரி போராடுவதற்கும், உண்ணாவிரதம் இருப்பதற்கும் அங்குள்ள தமிழர்களுக்கு முழு உரிமையும் உள்ளது.
ஆனால் நாடுதழுவிய ரீதியில் சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் பதட்டநிலை அதிகரித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், உண்ணாவிரத போராட்டம் நடத்துமளவுக்கு தமிழர்கள் மீது கல்முனை விகாராதிபதிக்கு திடீர் பாசம் ஏற்பட்டதுக்கு காரணமென்ன ?

கடந்த காலங்களில் இந்த செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று கல்முனை தமிழ் மக்கள் பல போராட்டங்களை நடாத்தியபோது இந்த தேரர் ஏன் அதில் கலந்துகொள்ளவில்லை ?
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகவும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்காகவும், தமிழ் கைதிகளின் விடுதலைக்காகவும், படை முகாம்கள் இருக்கின்ற காணிகளின் விடுவிப்புக்காகவும் சிங்கள தேசத்துக்கு எதிராக போராட்டம் நடாத்தியிருந்தால் இவர் தமிழ் மக்கள் மீது பாசமாக உள்ளார் என்பதனை ஏற்றுக்கொண்டு இருக்கலாம்.
ஆனால் இரு சிறுபான்மை சமூகம் சார்ந்ததும், எல்லை பிரிப்பதில் மிகவும் சிக்கல் நிறைந்ததும், வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுமான இந்த பிரச்சினையை தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் பேசிவருகின்ற நிலையில், குறுக்கே பாய்ந்துகொண்டு இந்த பௌத்த தேரர் திடீரென உண்ணாவிரதத்தில் இறங்கியதன் நோக்கத்தை தமிழ் மக்கள் அறியாமல் இருக்கமாட்டார்கள்.
அத்துடன் முள்ளியவாய்காலில் ஏராளமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை யுத்த வெற்றியாக பௌத்த தேசம் நடாத்திய கொண்டாட்டங்களில் இந்த தேரோவும் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்கெதிரான யுத்த வெற்றி கொண்டாடினார் என்பது ரகசியமல்ல.

போலி இன ஐக்கியமும், போலி சமாதானமும் பேசிவரும் இந்த பௌத்த பிக்கு கல்முனையில் முஸ்லிம் தமிழ் ஐக்கியத்தை விரும்பாத ஒரு குழப்பவாதி என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? ஆனால் இவர் ஒரு சமாதான தூதுவர் என்று நம்புகின்ற முட்டாள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவர் இன ஐக்கியம் என்ற போர்வையில் பொசன் நிகழ்வினை நடாத்தி முடித்தார். அதற்காக முஸ்லிம்களை நன்கு பயன்படுத்தி இருந்தார். அடிக்கடி உச்சி குளிர்ச்சி அடைகின்ற முஸ்லிம்களில் சிலர் பொசன் நிகழ்வுக்காக களத்தில் நின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்கள்.

ரசூலுல்லாஹ்வின் பிறந்த தினத்தை கொண்டாடலாமா என்று பட்டிமன்றம் நடாத்துகின்ற நாங்கள், கௌதம புத்தரின் உருவப்படம் தாங்கிய கொடிகளை வீதி வீதியாக எடுத்துகொண்டு சோடித்து பின்பு பொசன் கொண்டாடி 24 மணித்தியாலம் முடிவதற்குள் ஒற்றுமையாக இருக்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் இனமுறுகளை ஏற்படுத்தும் காரியத்தில் இறங்கியுள்ளார்.
அத்துடன் அண்மையில் உண்ணாவிரத போராட்டம் நடாத்திய ரத்ன தேரர் திடீரென சர்வதேச ரீதியில் பிரபலமடைந்தார். அதுபோல் தானும் பிரபலமடைய வேண்டும் என்ற ஆசை இந்த தேரருக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாது தான் தேசிய அரசியலிலும் பேசப்படுகின்ற ஒருவராக இருக்க வேண்டும் என்ற அவரது சுயநலத்துக்காக கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரச்சினையை கையிலெடுத்துள்ளார்.
எனவே தனது பிரபலத்துக்காகவும், கல்முனையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு முறுகல் நிலையை தோற்றுவித்து தென்னிலங்கை இனவாதிகளின் நோக்கத்தை அமுல்படுத்துவதற்கான ஒரு நாடகம்தான் இந்த தேரரின் உன்னாவிரதமே தவிர, உண்மையில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -