கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் முன்னால் ஏற்றப்பட்டுள்ள தேசிய கொடியின் நிலையே இது.

பாறூக் சிஹான் -
ல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் முன்னால் ஏற்றப்பட்டுள்ள தேசிய கொடியின் நிலையே இது.

கடந்த ஒரு மாத காலமாக இந்த கொடி சேதமடைந்து கிழிந்து தொங்கி பறக்கின்றதை யார் அறிவார்.

ஒரு நாட்டின் கொடியானது எவ்வளவு பெறுமதியானது என்பதை இச்செயலக பிரதேச செயலாளர் அறிவாரா?


சுதந்திரப் போராட்டத்தின்போது சுதந்திர உணர்வையும் ஒற்றுமையையும் மக்களிடம் உருவாக்க ஒரு கொடி தேவைப்பட்ட வரலாறை அறியாத இச்செயலக அதிகாரிகள் சேதமடைந்த கொடியினை மாற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

இலங்கையின் தேசியக்கொடி மஞ்சள் நிறப் பின்னணியில் அமைந்துள்ளது. இதில் இரண்டு பகுதிகளைக் காணமுடியும். கொடிக் கம்பத்தின் பக்கம் இருக்கும் பகுதியில் செம்மஞ்சளும் பச்சையுமான நிலைக்குத்தான இரண்டு பட்டைகள் உள்ளன. கொடியின் பெரும்பகுதியை அடக்கியுள்ள மற்றப்பகுதி கருஞ் சிவப்பு நிறத்தில் மஞ்சள் நிறத்திலான வாளேந்திய சிங்கமொன்றையும் நான்கு மூலைகளிலும் அரச மரத்து இலைகளையும் கொண்டுள்ளது. 

செம்மஞ்சள் நிறப் பட்டை தமிழரையும் பச்சை நிறப் பட்டை முஸ்லீம்களையும் சிங்கத்துடன் கூடிய கருஞ் சிவப்பு நிறப் பகுதி சிங்களவர்களையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -