இராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு ஒருவர் பலி இரு இராணுவத்தினர் படுகாயம்

பாறுக் ஷிஹான்-

யா
ழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு இடம்பெற்ற நிலையில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (1) மாலை குறித்த இராணுவ முகாமில் சிரமதான நடவடிக்கையில் இராணுவ அணி ஈடுபட்டிருந்தது.

இதன் போது கல் ஒன்றை அகற்றுவதற்காக நான்கு இராணுவ வீரர்கள் இணைந்து அகற்ற முற்பட்டுள்ளனர்.

அவ்வேளை கல் அருகே புதைக்கப்பட்டிருந்த அமுக்க கண்ணிவெடி எதிர்பாராத நிலையில் வெடித்துள்ளது.

குறித்த வெடி விபத்தினால் சம்பவ இடத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமிருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வெடிச்சம்பவத்தில் பலியான இராணுவ வீரரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவ பொலிஸார் பலாலி பொலிஸ் நிலைய அதிகாரிகளும் விசாரணைகளை இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -