அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் கடந்த 17 வருட காலமாக பதிவாளராக கடமையாற்றி ஒய்வு பெற்று செல்லும் ஜனாப். எஸ்.எம்.பஸீர் மற்றும் சமையலாளராக கடமையாற்றிய ஜனாபா. யு.எல்.ஜே.மசூதா அவர்களையும் பாராட்டி நினைவு சின்னம் மற்றும் காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (12) பதிவாளர் திரு. ஏ.புஸ்பராஜா தலமையில் கல்லூரியின் ஆராதணை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் அம்பாரை மாவட்ட செயலாளர் எம்.ஜே.எம்.சஜீத் அவர்களினால் நினைவு சின்னம் வழங்கப்பட்டதோடு அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர், செயலாளரினால் காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ், மற்றும் கல்விசாரா ஊழியர்களும் கலந்து கொண்டனர்.