மருத்துவர் ஷாபி ஆகியோர் மீது
பாராளுமன்றத்திலும், மேடைகளிலும், சந்திகளிலும், ஊடகங்களிலும் குற்றம் சுமத்தியவர்களைதான்
இனி விசாரிக்க வேண்டும்.
அமைச்சர் மனோ கணேசன்....!
அரசியல்வாதிகள் றிஷாட், ஹிஸ்புல்லா, ஆசாத் மற்றும் மருத்துவர் ஷாபி ஆகியோர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இதுவரை எந்தவித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என குற்றப்புலனாய்வு துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத்திலும், மேடைகளிலும், சந்திகளிலும், ஊடகங்களிலும் இவர்கள் மீது குற்றம் சுமத்தியவர்களைதான் இனி விசாரிக்க வேண்டும்.
இப்படியான குற்றம் சுமத்தியோர் பெரும்பாலோர் மஹிந்தவின் பொது பெரமுனவிலும், சிலர் ரணிலின் ஐதேகவிலும், இன்னும் கொஞ்ச பேர் மைத்திரியின் ஸ்ரீலசுகயிலும் இருக்கின்றார்கள்.
இன்னமும் குறிப்பிட்ட சில தேரர்களும் இந்த பட்டியலில் இருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் தமது "இனவாத விருப்ப"ங்களையே வெளிப்படுத்துகிறார்களே தவிர "சட்டப்பூர்வ சாட்சியங்கள்" எதையும் முன் வைக்கவில்லை என தெரிகிறது.